திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

கஜானாவை திறக்காமலே படத்தை தயாரிக்கும் கமல்.. ராஜதந்திரியாக மாறிய உலக நாயகன்

உலக நாயகன் கமல்ஹாசன் பல வருடங்களாக சினிமாவில் உள்ளதால் இதைப் பற்றி சகலமும் அவருக்கு தெரியும். அவர் பல மேடைகளில் பேசும்போது சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவிலே தான் செலவிடுவேன் என்று கூறியுள்ளார். ஆனால் தற்போது அதிலிருந்து கொஞ்சம் கமல் மாறிவிட்டார்.

சினிமாவை நன்கு புரிந்து கொண்ட கமல் இப்போது படத்தில் நடிப்பதை காட்டிலும் தயாரிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தையும் தனது ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் தயாரித்திருந்தார். இப்போது டாப் கதாநாயகர்களுக்கு வலை விரித்துள்ளார்.

Also Read : இப்பவே தோல்வி பயத்தை காட்டும் கமல்.. பதட்டத்துடன் இருக்கும் லியோ படக்குழு

சிவகார்த்திகேயன், சிம்பு போன்ற நடிகர்களின் படங்களை அடுத்தடுத்து கமல் தயாரிக்க இருக்கிறார். எல்லாமே பெரிய பெரிய பட்ஜெட்டில் உருவாக்க உள்ளதாம். இவ்வளவு பணம் கமலுக்கு எப்படி வருகிறது என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி தன்னுடைய கஜானாவை திறக்காமலேயே கமல் படங்களை தயாரிக்க இருக்கிறாராம்.

அதாவது கமலின் உதவியாளர் மகேந்திரன் விஜய் டிவி தொலைக்காட்சியில் உள்ளவர்களிடம் நெருங்கி பழகக் கூடியவராம். விஜய் டிவியின் எம்டி மாதவன் நாயர், கமல் இருவரும் நட்பாக பழகி வருகிறார்கள். கமல் பொதுவாக அவ்வளவு எளிதில் யாரிடமும் பழக மாட்டார். ஆனால் மாதவன் நாயருடன் நட்பு வைப்பதற்கு காரணம் உள்ளது.

Also Read : ரஜினி, விஜய் வெற்றி பெற்றால் தான் இருக்க முடியும்.. ஆனா கமல் அப்படி இல்லை, சர்ச்சையை கிளப்பிய இயக்குனர்

கமல் ஒரு படத்தின் இயக்குனர், நடிகர் மற்றும் இசையமைப்பாளர் முடிவு செய்தவுடன் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமைகளை இவரிடம் பேசி முடிகளை முடித்து விடுகிறாராம். பொதுவாக படம் முடிந்த பிறகு தான் படத்தின் சாட்டிலைட் உரிமம் விற்கப்படும். இந்த விஷயத்தில் கமல் ராஜதந்திரியாக செயல்பட்டு வருகிறார்.

இதேபோல் ஒவ்வொரு படமும் ஆரம்பிக்கும் போது படத்தை வாங்கும் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமையாளர்களிடம் பணத்தை தயார் செய்ய சொல்லிவிட்டு தனது கஜானாவில் இருக்கும் பணத்தை செலவழிக்காமல் அந்த பணத்தைக் கொண்டு படத்திற்கான வேலைகளை பார்த்து வருகிறாராம் கமல்.

Also Read : அஜித் இயக்குனரை டீலில் விட்ட கமல்.. நம்ப வைத்து கழுத்தறுத்த கொடுமை

- Advertisement -

Trending News