அஜித் இயக்குனரை டீலில் விட்ட கமல்.. நம்ப வைத்து கழுத்தறுத்த கொடுமை

கமல் இப்போது இந்தியன் 2 திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அதனுடன் சேர்த்து தயாரிப்பிலும் அதிக கவனம் செலுத்தி கொண்டிருக்கிறார். அதிலும் இளம் இயக்குனர்கள் மற்றும் நடிகர்களை வைத்து படங்களை தயாரிப்பதில் தான் அவர் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது சிவகார்த்திகேயன், சிம்பு ஆகியோரின் படங்களை தயாரிக்கிறார்.

அதைத்தொடர்ந்து இன்னும் சிலரிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த நிலையில் அவர் இந்தியன் 2 திரைப்படத்திற்கு பிறகு யாருடைய இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்ற விவாதம் தான் தற்போது அதிகமாக இருக்கிறது. ஏற்கனவே மணிரத்தினம் இயக்கத்தில் இவர் நடிக்க இருக்கும் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியானது.

Also read: அஜித்துக்கு தீனா படம் எப்படியோ அப்படித்தான் சிம்புவுக்கும் பத்து தல.. கோலிவுட்டில் பெரும் பரபரப்பு கிளப்பிய தயாரிப்பாளர்

ஆனால் அதற்கு முன்பாகவே கமல் பா ரஞ்சித், வெற்றிமாறன், எச் வினோத் ஆகியோரிடம் கதைகளை கேட்டு ஓகே செய்து வைத்திருந்தார். ஆனால் அது குறித்த எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. அவருக்காக காத்திருந்த இயக்குனர்களும் நொந்து போனதுதான் மிச்சம். அதிலும் எச் வினோத் இயக்கத்தில் கமல் நடிக்க போவது உறுதி என்ற தகவல்களும் தீயாக பரவியது.

அதன் அறிவிப்பு எப்போது வெளிவரும் என்று எதிர்பார்த்த வேலையில் தான் மணிரத்தினத்துடன் கமல் கூட்டணி அமைத்தார். இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தாலும் வினோத்தின் படம் என்ன ஆனது என்ற கேள்வியும் எழுந்தது. அது மட்டுமல்லாமல் துணிவு வெற்றிக்கு பிறகு கமலுடன் இணைவதற்கு அவரும் ஆர்வத்துடன் காத்திருந்தார்.

Also read: அடுத்து ஆஸ்கர் கதவை தட்டப்போகும் படம்.. உலகநாயகன் செய்யப்போகும் வரலாறு

ஆனால் கமல் தற்போது அஜித்தின் ஆஸ்தான இயக்குனரை டீலில் விட்டு விட்டாராம். அதாவது அவர் மணிரத்னம் திரைப்படத்தில் நடிக்கவும் அதற்காகத் தன் உடலை மெருகேற்றவும் முடிவு செய்துள்ளாராம். ஏனென்றால் தற்போது இந்தியன் 2 திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. மேலும் படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை.

இதனால் படத்தின் வியாபாரமும் எதிர்பார்த்ததற்கு மேலாகவே இருக்கும். இதனால் தன்னுடைய அடுத்த படமும் அப்படி ஒரு ஹிட் படமாக அமைந்து ஹாட்ரிக் வெற்றியாக இருக்க வேண்டும் என கமல் திட்டமிட்டுள்ளார். அதற்காகவே இந்த முடிவை அவர் எடுத்துள்ளாராம். ஆனால் இது வினோத்தை கொஞ்சம் கோபமடைய வைத்திருக்கிறது. இதை முன்பே சொல்லியிருந்தால் வேறு நடிகரை வைத்து படம் இயக்க சென்றிருக்கலாமே என்ற ஆதங்கத்தில் அவர் இப்போது இருக்கிறாராம்.

Also read: அஜித்தை பார்த்து ஓரம் கட்டிய சிவகார்த்திகேயன்.. முழு வீச்சில் செக் வைக்கும் மனைவி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்