மாஸ்டருக்கு எதிராக சாட்டையை சுழற்ற போகும் கமல்.. வஞ்சத்தால் பழி வாங்கப்பட்ட போட்டியாளர்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு ராஜா ராணி டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி ராயல் மியூசியமாக மாறும் பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதாபாத்திரத்தில் விளையாடி வருகின்றனர். மன்னர் காலம் என்பதால் போட்டியாளர்கள் செந்தமிழில் தான் பேச வேண்டும் என்ற விதிமுறையும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதனால் தூய தமிழில் பேசுகிறேன் என்ற பெயரில் போட்டியாளர்கள் தமிழை படுகொலை செய்து வருகின்றனர். இதை நிச்சயம் இந்த வாரம் ஆண்டவர் விமர்சிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் ராபர்ட் மாஸ்டரின் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கு கோபத்தை வரவழைக்கிறது.

Also read: ரக்ஷிதா, ராபர்ட் மாஸ்டரை தொடர்ந்து பிக்பாஸில் மலர்ந்த அடுத்த காதல்.. நிராகரித்த கதிரவன்

அதிலும் நேற்று அவர் சிவினுக்கு கொடுத்த தண்டனை குரூரத்தின் உச்சம். அவருக்கு சிவின் மீது ஏன் இந்த பழிவாங்கும் உணர்ச்சி என்று தெரியவில்லை. ஒருவேளை ரட்சிதாவின் சாப்பாட்டில் அவர் உப்பை கொட்டியதால் வந்த கோபமாக கூட இருக்கலாம். அதற்காக அவர் கொஞ்சம் ஓவராக நடந்து கொள்வதை பார்த்து பிக்பாஸ் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சாப்பாட்டில் அவர் உப்பு கொட்டியதை அடுத்து அவருக்கு மேக்கப் முழுவதையும் கலைக்க வேண்டும் என்ற தண்டனையை ராபர்ட் கொடுத்தார். ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை. அதை மனதில் வைத்துக் கொண்டே நேற்று செருப்பை திருடிய சிவினுக்கு மீண்டும் அதே தண்டனையை அவர் கொடுத்தார். அதற்கு வீட்டில் இருந்த மற்ற போட்டியாளர்களும் ஆதரவு கொடுத்தது தான் கொடுமை.

Also read: நூலிழையில் உயிர் தப்புவாரா ரஞ்சிதாவின் மாஸ்டர்.? இந்த வாரம் வெளியேறும் போட்டியாளரின் ஓட்டிங் லிஸ்ட்

அதாவது சிவின் முகத்தில் உள்ள மேக்கப்பை எண்ணெய் கொண்டு முழுதாக அழிக்க வேண்டும், நகைகள் அனைத்தும் கழட்டப்பட வேண்டும் என்று ராபர்ட் கூறினார். உடனே தனலட்சுமி சிரித்துக் கொண்டே அவருடைய மேக்கப்பை கலைத்தார். அது மட்டுமல்லாமல் இன்று முழுவதும் இவள் இப்படித்தான் இருக்க வேண்டுமா என்று ராபர்ட் மாஸ்டரிடம் கேட்பது போல் ஒரு ஐடியா வேறு கொடுத்தார். இது ஒரு புறம் இருக்க அமுதவாணன் மேக்கப் இல்லாமல் ஆயா மாதிரி இருக்கு என்று கூறிய போது தனலட்சுமி மேக்கப் போட்டாலும் அவள் அப்படித்தான் இருப்பாள் என்று கூறியது ரொம்ப ஓவர்.

இப்படி வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் அவரை கலாய்க்கும் போது விக்ரமன் மற்றும் மைனா நந்தினி மட்டும்தான் சிவினுக்கு ஆதரவாக இருந்தார்கள். இதுதான் தற்போது சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஒருவரை உருவ கேலி செய்வது மிகவும் தவறு. ஆனால் பிக் பாஸ் வீட்டில் சிவினை மட்டும் மற்றவர்கள் தொடர்ந்து இதேபோன்று பேசி வருகிறார்கள். இதை இந்த வாரம் நிச்சயம் கமல் தட்டிக் கேட்க வேண்டும் என்றும், ராபர்ட் மாஸ்டரின் நடவடிக்கைக்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Also read: நான் உன்ன தங்கச்சினு நினைச்சேன் அவமானப்படுத்திட்ட.. ஜனனியால் ரணகளமான பிக்பாஸ் வீடு

- Advertisement -