வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

அவசரமாய் இத்தாலியில் இருந்து வரும் கமல்.. உலகநாயகனுக்கு தெரியாது அவங்க அப்படின்னு

கமலின் இந்தியன் 2 படம் ரொம்ப வருடமாக இழுவையில் இழுத்தடித்துக் கொண்டிருந்தது. இந்நிலையில் இதற்கு ஏற்பட்ட பிரச்சனையை சரி செய்துவிட்டு இப்பொழுது படப்பிடிப்பு வேலைகள் மும்பரமாக நடைபெற்று வருகிறது. ஏனென்றால் இந்த படத்தை கூடிய விரைவில் வெளியிட வேண்டும் என்பதற்காக சூட்டிங் இல் அதிகம் கவனம் செலுத்தி வந்து கொண்டிருந்தார்.

இதனை அடுத்து இந்த படத்திற்கான படப்பிடிப்பு இத்தாலியில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆனால் இப்பொழுது இந்த படப்பிடிப்பை பாதியில் விட்டுவிட்டு அவசர அவசரமாக இன்று சென்னை திரும்புகிறார். என்ன காரணம் என்றால் மிகப்பிரமாண்டமான முறையில் உருவாகி பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளிவர இருக்கிறது. அதனால் நாளை சென்னையில் ஆடியோ லான்ச் கோலாகலமாக ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

Also read: பிரம்மாண்டமாக நடக்கும் பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழா.. சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா?

இதற்கு சிறப்பு விருந்தினராக இவருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் இயக்குனர் மணிரத்தினம். அதனால் இதை மிஸ் பண்ண கூடாது என்பதற்காகவும் இது இவருக்கு கிடைத்த கௌரமான ஒரு விஷயம். அத்துடன் இது முக்கியமான தருணம் என்பதற்காக பங்கேற்க வருகிறார். மேலும் இந்த படத்திற்கான இரண்டாம் பாகத்திற்கான ஆடியோ விழா எல்லா மொழிகளிலும் நடைபெற இருக்கிறது.

ஏற்கனவே முதல் பாகத்திற்கு மணிரத்தினத்தின் மனைவி சுகாசினி மற்றும் விக்ரம் இருவரும் ஒரு படு பயங்கரமான வேலையை செய்து வந்தார்கள். எல்லா ஊர்களுக்கும் சென்று இது உங்கள் படம் உங்கள் இடத்தில் தான் சூட்டிங் நடைபெற்றது. உங்களுக்கு உண்டான படம் என்றும் தமிழுக்கு முக்கியமான அங்கீகாரத்தை கொடுத்து எடுக்கப்பட்டிருக்கிறது என்று கூவி வந்தார்கள்.

Also read: புலிக்கு வாலாக இருப்பதை விட பூனைக்கு தலையாக இருக்கலாம்.. கமல் கூப்பிடும் வர மறுத்த ஜாம்பவான்

அவர்கள் இப்படி முதல் படத்திற்கு பிரமோஷன் செய்யும் விதமாக இப்படி பேசி தமிழ் படமாகிய பொன்னியின் செல்வன் படத்தை அசிங்கப்படுத்தி விட்டார்கள். இதையே இப்பொழுது உலகநாயகன் அவர்களும் செய்யாமல் இருந்தால் ரொம்ப நல்லா இருக்கும் என்று கூறுகிறார்கள்.

இவர்களைப் பற்றி தெரிந்தும் ஏன் கமல் படப்பிடிப்பில் பிசியாக இருப்பதை தாண்டியும் இதில் இப்படி கலந்து கொள்வதற்கு என்ன அவசியம் என்று பேசி வருகிறார்கள். ஏற்கனவே இந்த படத்தின் ஆடியோ லாஞ்சில் ரஜினியை ஒதுக்கும் விதமாக அவருக்கு பெரிய அவமானத்தை கொடுத்திருக்கிறார் மணிரத்தினம். இப்பொழுது கமலையும் வைத்து இந்த மாதிரி ஒரு விஷயம் செய்தால் அது எந்த விதத்தில் சரியாக இருக்கும்.

Also read: இந்தியன் 2வில் ஷங்கருக்கு கட்டளையிட்ட உலகநாயகன்.. உயிரே போனாலும் அவர் காட்சிகளை நீக்க கூடாது

- Advertisement -

Trending News