புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

அறிவுரை சொல்லல கண்டிக்கிறேன்.. பிரியங்கா மற்றும் அபிஷேக்கை வறுத்தெடுத்த கமல்!

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் ஒவ்வொரு ஞாயிறு மற்றும் சனிக்கிழமை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்குவார். இந்த இரண்டு நாட்களில் பிக்பாஸ் போட்டியாளர்கள் செய்த குற்றம் குறைகளை சுட்டிக்காட்டி வெளுத்து வாங்குவார். அந்த வகையில் சனிக்கிழமை ஆன நேற்று பிரியங்காவிற்கும் அபிஷேகிக்கும் செம டோஸ் கிடைத்தது.

முதலில் பிரியங்காவிடம் ஆரம்பித்த ஆண்டவர், வரிசையாக அடுக்கிய குற்றச்சாட்டுகளுக்குகெல்லாம் ‘மாற்றிக் கொள்கிறேன்’ என்ற ஒரே வார்த்தையால் எஸ்கேப் ஆகிவிட்டார். அதன்பிறகு சிக்கிய சினிமா பையன் அபிஷேக் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கவே இல்லை என்று ஒரே போடு போட்டதால் கடுப்பான கமல் அவருடைய தோனியில் நக்கல் அடித்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்ப்போருக்கு குளுகுளுன்னு இருந்தது. அத்துடன் அவர் நான் அறிவுரை சொல்லவில்லை கண்டிக்கிறேன் என்று கமல் கண்டிப்புடன் பேசியதும் அபிஷேக்கின் முகம் சுருங்கியது. யூடியூபரான அபிஷேக் சினிமா பிரபலங்களைப் பேட்டி எடுப்பது போன்று, பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் மையமாக இருந்த மற்ற போட்டியாளர்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருப்பதை ஆண்டவர் வன்மையாக கண்டித்தார்.

எனவே மக்களிடம் குறைந்த வாக்கு பெற்ற அபிஷேக், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியிட உள்ள நிலையில் பஞ்சதந்திர நாணயம் அவரை காப்பாற்றுமா எந்த கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. அபிஷேக்கை வெளுத்து வாங்கியது போன்று, நிரூப் கையில் பிரியங்கா எழுதிக் கொடுத்ததை கமல் குறும்படம் போட்டிருந்தால் நிகழ்ச்சி கொஞ்சம் காட்டமாக மாறியிருக்கும்.

kamal-bb5-cinemapettai
kamal-bb5-cinemapettai

ஏனென்றால் பிரியங்கா, நிரூப் கையில் விளையாட்டுக்காக எழுதினேன் என்று சொன்னதை கமல் நம்பி விட்டாரோ ரசிகர்கள் குழம்பினர். ஆனால் பிரியங்கா செய்த தவறை ஒத்துக்கொள்ளாமல் சிரித்து மழுப்பி விட்டார்.

இருந்தாலும் நேற்றைய நிகழ்ச்சியில் அபிஷேக் மற்றும் பிரியங்கா இருவரையும், வாழைப்பழத்தில் ஊசி ஏற்றியது போல் கண்டித்த கமலை பிக்பாஸ் ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.

- Advertisement -

Trending News