இவரை வைத்தே சாதித்து விடலாம்.. அடம் பிடித்து பட்டறையை போட சொல்லும் கமல்

உலகநாயகன் கமல் ஒரு சிறந்த நடிகர் என்பதையும் தாண்டி அட்டகாசமான இயக்குனரும் கூட. இவரின் இயக்கத்தில் வெளியான ஹேராம், விருமாண்டி, விஸ்வரூபம் போன்ற ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு ரகமாக ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

ஆனால் கமல் இப்போது படங்களை இயக்குவதை காட்டிலும் தயாரிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் இவருடைய ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தற்போது முன்னணி நடிகர்களை வைத்து பல திரைப்படங்களை தயாரிக்கும் முனைப்பில் இருக்கிறது.

மேலும் கமல் ஒரு படம் இயக்கினால் அதில் பல புது டெக்னாலஜிகளையும், புதுப்புது விஷயங்களையும் அறிமுகப்படுத்துவார். அப்படி நம் தமிழ் சினிமா கண்டிராத பல தொழில்நுட்பங்களை நமக்கு அறிமுகப்படுத்திய பெருமை கமலுக்கு உண்டு.

அப்படிப்பட்ட கமலே ஒரு இளம் இயக்குனரின் திறமையை பார்த்து வியந்து போய் இருக்கிறார் என்றால் பலருக்கும் அது வியப்பாகத்தான் இருக்கும். ஆனால் அதுதான் உண்மை அந்த இயக்குனர் வேறு யாருமல்ல தற்போது கமலை வைத்து விக்ரம் திரைப்படத்தை இயக்கி இருக்கும் லோகேஷ் கனகராஜ் தான்.

கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், மேக்கிங் வீடியோ என அனைத்தும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. அந்த வகையில் இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது.

விரைவில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் காட்சிகளையும், இயக்குனரின் திறமையையும் பார்த்த கமல் வியந்து போய் இருக்கிறார். அதனால் கமல் அவரின் திறமையை தன்னுடைய அடுத்த படத்திலும் பயன்படுத்த நினைத்து அவரை ஒரு படம் பண்ண சொல்லி கேட்டிருக்கிறார். அதன்படி லோகேஷ் கனகராஜ் மீண்டும் கமலின் தயாரிப்பில் ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார்.

Next Story

- Advertisement -