புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

சிம்பு படத்திற்கு முட்டுக்கட்டை போட்ட தயாரிப்பாளர்.. ஆண்டவரால் ஏற்பட்ட விடிவுகாலம்

Actor Simbu: சிம்பு இப்போது மலேசியாவில் யுவன் சங்கர் ராஜா நடத்தும் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். மாநாடு படத்திற்கு முன்பு அவரது சினிமா கேரியரை கேள்விக்குறியான நிலையில் இருந்தது. ஆனால் மாநாடு மிகப்பெரிய வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்திருந்தது.

இதைத்தொடர்ந்து வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல ஆகிய படங்கள் வெளியாகி ஹாட்ரிக் வெற்றியை சிம்பு கொடுத்திருந்தார். மேலும் தொடர்ந்து பெரிய தயாரிப்பு நிறுவனங்களின் பட வாய்ப்பு சிம்புவை நாடி வருகிறது. அதன்படி தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு, கமல் தயாரிப்பில் புதிய படத்தில் நடித்திருக்கிறார்.

Also Read : மலேசியாவில் மையம் கொண்டுள்ள சிம்பு, சிவகார்த்திகேயன்.. இதுதான் காரணமாம்

ஆனால் இந்த படத்திற்கு முட்டுக்கட்டை போட்டு உள்ளார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ். ஏனென்றால் வேல்ஸ் நிறுவனத்துடன் சிம்பு அடுத்தடுத்து மூன்று படங்கள் பண்ணுவதாக வாக்கு கொடுத்திருக்கிறார். இதற்கான குறிப்பிட்ட அட்வான்ஸ் தொகையையும் பெற்றுள்ளார். ஒரு படம் முடிந்த ரிலீஸான நிலையில் கொரோனா குமார் படத்தில் நடித்து வந்தார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் சென்ற நிலையில் ஏதோ ஒரு காரணத்தினால் தடைப்பட்டு நிற்கிறது. இந்த சூழலில் தன்னுடைய படங்களை முடித்துவிட்டு தான் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க வேண்டும் என ஐசரி கணேஷ் கூறியிருக்கிறார். இதனால் கமல் படத்தில் சிம்பு நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

Also Read : ஏழு மாதங்களாக ஏங்கி கிடக்கும் சிம்பு.. செகண்ட் இன்னிங்ஸ் கேரியருக்கு வரப் போகும் பெரிய ஆபத்து

அதன் பிறகு நேரடியாகவே கமல் ஐசரி கணேஷை தொடர்பு கொண்டு சிம்பு இந்த படத்தில் நடிக்க அனுமதி வாங்கி இருக்கிறார். இதனால் அவரும் கமல் படத்தை முடித்த பின்பு தனது படத்தில் சிம்பு நடிக்குமாறு கூறியிருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் என்னுடைய அண்ணன் போல் தான் கமல், அவர் படத்தில் நடித்தால் என்ன, என் படத்தில் நடித்தால் என்ன என்பது போல கூறி இருக்கிறார்.

ஆகையால் ராஜ்கமல் நிறுவனம் சார்பில் சிம்பு நடிக்க உள்ள படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. மேலும் சமீபத்தில் சிம்பு மலேசியா சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வந்தனர். இந்நிலையில் கமல், சிம்பு கூட்டணியில் உருவாக உள்ள படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.

Also Read : முன்னாள் காதலியை காட்டி கதி கலங்க வைத்த 5 படங்கள்.. சிம்புவை பாடாய்படுத்திய ரீமாசென்

- Advertisement -

Trending News