நம்பியவர்களை டீலில் விட்ட கமல்ஹாசன்.. இன்னுமா இந்த உலகம் நம்மளை நம்புது

கமல் தற்போது பம்பரமாக சுழன்று கொண்டிருக்கிறார். விக்ரம் திரைப்படத்தால் படு உற்சாகமாக இருக்கும் கமல் அடுத்தடுத்த வேலைகளில் பிஸியாகிவிட்டார். அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆண்டவரால் களைக்கட்டி வருகிறது.

வார இறுதியில் ஆண்டவரை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் பலரும் டிவி முன்பு ஆஜராகி விடுகின்றனர். அதிலும் முந்தைய சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் கமல் பயங்கர சுறுசுறுப்பாக இருக்கிறார். பிக்பாஸ் மட்டுமல்லாமல் அவர் தற்போது இந்தியன் 2 திரைப்படத்திலும் இரவு பகல் பாராமல் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Also read : பொன்னியின் செல்வனால் எகிறிய மவுசு.. கலக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயிக்கப்போவது யாரு?

அதனால் அவருக்கு தூங்குவதற்கும், சாப்பிடுவதற்கும் கூட நேரம் இல்லையாம். அந்த அளவுக்கு மனுஷன் பிஸியாக மாறி இருக்கிறார். இதனால் அவர் சில வருடங்களுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதியை மறைந்துள்ளார். அதாவது பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தவர் தர்ஷன்.

இவருக்கு தன்னுடைய ராஜ்கமல் தயாரிக்கும் படத்தில் நிச்சயம் வாய்ப்பு உண்டு என்று கமல் வாக்குறுதி கொடுத்திருந்தார். ஆனால் அந்த சீசன் முடிந்து கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கடந்த நிலையிலும் கமல் அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. அவருக்கு அடுத்த சீசனில் கலந்து கொண்ட சிவானிக்கு கூட விக்ரம் திரைப்படத்தில் ஒரு சிறிய வாய்ப்பு கிடைத்தது.

Also read : கமல்ஹாசனுடன் நடிக்காததற்கு இதுதான் காரணம்.. நதியா சொன்ன பதில்

ஆனால் தர்ஷனுக்கு எந்த வித வாய்ப்பும் கிடைக்கவில்லை. அதேபோன்று 2021ல் சிவகார்த்திகேயன் தன்னுடைய நிறுவன தயாரிப்பில் நடிப்பார் என்று மேடையிலேயே வாக்குறுதி கொடுத்தார். இது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் இப்போது வரை அந்த விஷயம் என்ன ஆனது என்று யாருக்கும் தெரியவில்லை.

தற்போது சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த திரைப்படங்களில் பிசியாக இருக்கிறார். அதேபோல் கமலும் தன்னுடைய நிறுவன தயாரிப்பு, நடிப்பு என்று பிசியாக மாறிவிட்டார். அதனால் கொடுத்த வாக்குறுதியை பற்றி நினைப்பதற்கு கூட அவருக்கு நேரமில்லை. அந்த வகையில் அவர் இரண்டு பேருக்குமே நன்றாக அல்வா கொடுத்து விட்டார்.

Also read : ஆண்டவர் சொல்லி கொடுத்த பாடம்.. மேடையில் மைக் மோகன் பெருமிதம்

Next Story

- Advertisement -