சர்வைவர் முடிந்த கையோடு அர்ஜுன் போட்ட முதல் பதிவு.. அதிர்ச்சியில் திரையுலகம்

ஜீ தமிழ் தொலைக்காட்சி மூலம் சர்வைவர் நிகழ்ச்சியை தலைமை தாங்கி வெற்றிகரமாக முடித்துள்ளார் அர்ஜூன். இதைத்தாண்டி அவருக்கு பெரும் தலைவலி தற்போது ஏற்பட்டுள்ளது, இதனை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கொரோனா அச்சம் காரணமாக ஓராண்டுக்கும் மேலாக மக்கள் வீடுகளில் முடங்கி கிடந்த நிலையில் தற்போது தான் வெளியில் வந்து அவரவர் பணிகளை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் மீண்டும் கொரோனா தலை தூக்க தொடங்கி விட்டது. அதோடு மேலும் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் தொற்றும் உருவாகி வருகிறது.

இந்நிலையில் தான் சமீபத்தில் உலக நாயகன் நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. வெளிநாட்டு பயணம் சென்று வந்த கமல் கையோடு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். பின்னர் லேசான இருமல் இருக்கவே பரிசோதனை செய்ததில் கமலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு கமல் சிகிச்சை பெற்று வந்தார்.

தற்போது நடிகர் கமலை தொடர்ந்து பிரபல நடிகர் அர்ஜுனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங்காக வலம் வந்த நடிகர் அர்ஜூன் ஒரு சமயத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தார். தற்போதும் ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவான சர்வைவர் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் அர்ஜூன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இது குறித்து அர்ஜூன் கூறியிருப்பதாவது, “கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். என்னை சமீபத்தில் சந்தித்தவர்கள் கொரோனா டெஸ்ட் செய்து கொள்ள வேண்டும். அனைவரும் மாஸ்க் அணிவதை புறக்கணிக்க வேண்டாம்” என கூறியுள்ளார்.

arjun-covid19-insta-post
arjun-covid19-insta-post

ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கி வரும் நடிகர் கமல்ஹாசனை தொடர்ந்து, ஜீ தமிழ் ரியாலிட்டி ஷோவின் தொகுப்பாளரான நடிகர் அர்ஜூனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை