விக்ரம் படத்திற்காக கமல்ஹாசன் செய்த செயல்.. புல்லரித்துப் போன லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் விக்ரம். இப்படம் வருகின்ற ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் பிரமோஷனுக்காக லோகேஷ் கனகராஜ் பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்.

இதில் விக்ரம் படத்தின் படப்பிடிப்பில் நடந்த பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். முதலில் கமலஹாசன் எல்லா கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். இதனால் எந்த மாதிரி கமலஹாசனை காட்டவேண்டும் என்ற யோசனையில் லோகேஷ் கனகராஜ் இருந்துள்ளார்.

இந்நிலையில் ஒரு வரியில் ஒரு கதையை எழுதிக் கொண்டு கமலஹாசனிடம் சென்று உங்களுக்கு எது போன்ற கதை வேண்டும் என கேட்டுள்ளார். அப்போது கமலஹாசன் விரும்பிய ஒரு கதாபாத்திரத்தை லோகேஷ் கனகராஜ் இடம் கூறியுள்ளார்.

லோகேஷ் எழுதிய கதையும் கமல்ஹாசன் கூறிய கதாபாத்திரமும் ஓரளவு ஒத்துப் போய் உள்ளது. அதன்பிறகு லோகேஷ் இரண்டு மாதங்கள் எடுத்துக் கொண்ட படத்தின் கதையை எழுதியுள்ளார். அதன்பிறகு ஒன்றரை மணி நேரம் கதையை கமலிடம் சொல்லியுள்ளார். உடனே அந்த கதை கமலுக்கு பிடித்துப்போக பண்ணலாம் என கூறியுள்ளார்.

அதன்பிறகு லோகேஷ் ஆறு மாத காலத்தில் ஃபுல் ஸ்கிரிப்டை எழுதியுள்ளார். அதன் பிறகு படப்பிடிப்பு தொடங்கிய பிறகு இது உன்னுடைய கதை, படத்தில் நான் நடிகன் மட்டுமே என கமலஹாசன் கூறியுள்ளார். இதனால் லோகேஷ்க்கு கமலஹாசன் முழு சுதந்திரம் கொடுத்துள்ளார்.

விக்ரம் படம் முழுவதுமாக 125 நாள் சூட்டிங் சென்றுள்ளது. அதில் 60 நாள் மட்டுமே கமலுக்கு படப்பிடிப்பு நடந்தது. மீதமுள்ள நாட்களில் என்ன நடந்தது என்று கூட கமல் கேட்கவில்லையாம். படத்தை முழுவதுமாக முடிந்துவிட்டு லோகேஷ் கமலிடம் காட்டி உள்ளார். அவ்வாறு தனக்கு கமலஹாசன் முழு சுதந்திரம் கொடுத்ததனால் தான் விக்ரம் படம் இந்த அளவுக்கு உருவாகியுள்ளது என அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Next Story

- Advertisement -