கமல் எனக்கு கொடுத்த எதிர்பாராத பரிசு.. உண்மையை போட்டுடைத்த விஜய் சேதுபதி

நாளுக்கு நாள் விஜய்சேதுபதிக்கு ரசிகர்கள் கூடிக்கொண்டே போகிறார்கள். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து அசுர வளர்ச்சி அடைந்து வருகிறார். கோலிவுட்டில் மட்டும் தான் இப்படி என்றால் தற்போது பாலிவுட்டிலும் பட்டையை கிளப்பி வருகிறார்.

விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக வெளியான படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் கமலஹாசனுக்கு வில்லனாக விஜய் சேதுபதி மிரட்டியிருந்தார். இப்படத்தில் ஒரு போதைப் பொருள் கடத்தல்காரர் ஆக விஜய் சேதுபதி நடித்திருந்தார்.

விக்ரம் படம் வெளியாகி ஏகபோக வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது வரை விக்ரம் படம் 300 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. இதனால் கமல் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருப்பதால் படக்குழுவுக்கு பரிசை வாரி வழங்கி வருகிறார்.

அந்த வகையில் விக்ரம் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு ஒரு கோடி மதிப்பிலான காரும், 13 உதவி இயக்குனர்களுக்கு பைக்கையும் பரிசாக வழங்கினார். மேலும் சமீபத்தில் சூர்யாவுக்கு கமலஹாசன் சென்டிமென்டாக பல வருடமாக வைத்திருந்த ரோலக்ஸ் வாட்சை பரிசாக வழங்கினார்.

மேலும் சமீபத்தில் அனிருத்யிடம் உங்களுக்கு கமலஹாசன் என்ன பரிசு கொடுத்தார் எனக் கேட்டிருந்தனர். அதற்கு விக்ரம் படமே தனக்கு ஒரு பரிசு என அனிருத் கூறியிருந்தார். தற்போது விஜய் சேதுபதி மாமனிதன் படத்தின் பிரஸ்மீட்டில் பங்கேற்கும் போது உங்களுக்கு என்ன பரிசு கமலஹாசன் கொடுத்தார் என்று கேள்வி வைக்கப்பட்டது.

விக்ரம் படத்தில் அவருடன் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய பரிசுதான். என் வாழ்நாளில் அவருடன் நடிப்பேன் என்ற கனவில்கூட நினைத்துப் பார்த்ததில்லை. ஆனால் அந்த விஷயம் அவரால் சாத்தியமானது. அதுவே எனக்கு மிகப்பெரிய பாக்கியம் என விஜய்சேதுபதி கூறியுள்ளார்,

Next Story

- Advertisement -