உலக நாயகனை இயக்குனர் ஆக்கியதே இந்த படம்தான்.. அதுவும் யாரால தெரியுமா?

உலகநாயகன் கமலஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் 1986 இல் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் தொடர்ச்சி அல்ல.

இந்தப்படத்தில் இடம்பெற்ற தீம் பாடலின் ரீமிக்ஸ் ஐ தற்போது உருவாகி வரும் விக்ரம் படத்தில் பயன்படுத்தி உள்ளனர். தற்போது நடிகர், இயக்குனர், கதையாசிரியர், தயாரிப்பாளர், பாடகர், அரசியல்வாதி என பன்முகத்திறமை கொண்ட கமலஹாசனை இயக்குனராக அடித்தளமிட்ட படம் விக்ரம் தான்.

கமலஹாசன் நடிப்பில் 1986ல் வெளியான விக்ரம் படத்தில் திரைக்கதை சுஜாதா எழுதி இருந்தார். இந்த படத்தை முதலில் இயக்குனர் மணிரத்னம் இயக்குவதாக இருந்தார். சில காரணங்களால் மணிரத்னம் இயக்க முடியாமல் போக ராஜசேகர் விக்ரம் படத்தை இயக்கியிருந்தார்.

இப்படத்தில் கமலஹாசன், அம்பிகா, சத்யராஜ், சாருஹாசன், ஜனகராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். கமலஹாசன் இப்படத்தை தயாரித்து இருந்தார். விக்ரம் படத்தின் படப்பிடிப்பு பாதி முடிந்த நிலையில் இயக்குனர் ராஜசேகர் அவர்களும் விலகிவிட்டார்.

இதனால் கமலஹாசன் என்ன செய்வதென்று தெரியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானார். பின்பு அவரே இப்படத்தை இயக்குவதாக முடிவு செய்தார். அதன்பிறகு மீதி உள்ள படத்தின் படப்பிடிப்பை கமலஹாசனை இயக்கியிருந்தார். விக்ரம் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் மூலம் இயக்குனரான கமலஹாசன் ஹேராம், விருமாண்டி, விஸ்வரூபம், விஸ்வரூபம் 2 போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். மணிரத்னம் மட்டும் விக்ரம் படத்தை இயக்க சம்மதித்து இருந்தால் கமல் இயக்குனராகி இருப்பாரா என்பது சந்தேகம்தான்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்