வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

63 ஆண்டுகளுக்கு முன்பே வரலாற்று சாதனை படைத்த கமல்.. ஏவிஎம்மின் மைல் கல்லான படம்

Actor Kamal: சினிமாவை ஒருவரால் இந்த அளவுக்கு வெறித்தனமாக காதலிக்க முடியுமா என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம் கமலால் முடியும் என்று. அந்த அளவுக்கு சினிமாவுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இவர் உலகநாயகன் என்று கொண்டாடப்படுவதற்கும் காரணம் இருக்கிறது.

ஏனென்றால் சினிமாவுக்கு பல புது தொழில்நுட்பங்களையும், வித்தியாசமான நடிப்பையும் கொடுத்த பெருமை இவருக்கு உண்டு. எடுத்த கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து அதற்காகவே அர்ப்பணிக்கும் வெகு சில நடிகர்களில் இவருக்கு முக்கியமான இடமும் இருக்கிறது.

Also read: சமீபத்தில் அசுர வளர்ச்சி அடைந்த 5 நடிகர்கள்.. கமல் வரை கூப்பிட்டு பாராட்டிய குறட்டை மன்னன்

அந்த வகையில் இந்த உலக நாயகன் திரைத்துறைக்கு வந்து 63 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பது ஆச்சரியம் தான். களத்தூர் கண்ணம்மா என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் இப்போது விக்ரம் வரை தன்னுடைய சாதனையை வரலாறாக மாற்றி இருக்கிறார்.

இதற்கு முக்கிய காரணமாக அமைந்த ஏவிஎம் நிறுவனம் இதை பெருமையாக தற்போது கூறி இருக்கிறது. அதாவது களத்தூர் கண்ணம்மா வெளிவந்து இன்றோடு 63 ஆண்டுகள் ஆகிறது. அதை நினைவு கூர்ந்துள்ள ஏவிஎம் இப்படம் தங்கள் நிறுவனத்திற்கு ஒரு மைல் கல்லாக இருந்ததாக பெருமையுடன் கூறி இருக்கின்றனர்.

Also read: மரண படுக்கை வரை கமலுடன் சேர்ந்து நடிக்காமல் போன நடிப்பு அரக்கன்.. நாயகனில் வாய்ப்பு கிடைத்தும் மறுத்த காரணம்

அந்த வகையில் பீம்சிங் இயக்கத்தில் ஜெமினி கணேசன், சாவித்திரி நடிப்பில் வெளிவந்த அப்படத்தில் கமல் அவர்களுடைய மகனாக நடித்திருப்பார். மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்த களத்தூர் கண்ணம்மா அப்போதே தியேட்டர்களில் 100 நாட்கள் வரை ஓடி சாதனை படைத்தது.

இதை தற்போது குறிப்பிட்டு இருக்கும் ஏவிஎம் மேற்கண்ட ஜாம்பவான்களால் மட்டுமே இது சாத்தியம் என்று பெருமையுடன் கூறியிருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் உலக நாயகன் என்ற சிறந்த கலைஞரை அறிமுகப்படுத்திய பெருமையும் எங்களுக்கு உண்டு எனவும் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் கமலின் இந்த 63 ஆண்டுகால சாதனை மிகப்பெரும் வரலாறு தான்.

Also read: முதல் முதலில் வெளிநாட்டில் எடுக்கப்பட்ட ரஜினி, கமல் படம்.. சூப்பர் ஸ்டாரை தூக்கி விட்டு, ஆண்டவரை காலை வாரியது

- Advertisement -

Trending News