STR 48லாம் இல்ல, ஆசை காட்டி மோசம் செய்த கமல்.. ஒப்புக்கு சப்பாணி தான் தக் லைஃப்

STR 48: வெந்து தணிந்தது காடு ரிலீஸ்க்கு பிறகு திடீரென சிம்பு கமலுக்கு செல்ல பிள்ளையாகி விட்டார். STR 48 படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதை தொடர்ந்து 36 வருடங்கள் கழித்து இணையும் மணிரத்தினம் மற்றும் கமலின் தக் லைஃப் படத்திலும் சிம்புவுக்கு முக்கியமான ரோல் கொடுக்கப்பட்டது.

இதுவரை தக் லைஃப்-யில் இணைத்த முக்கியமான பிரபலங்கள்

Trisha Krishnan
Aishwarya Lekshmi
Silambarasan TR
Pankaj Tripathi
Joju George
Abhirami
Nassar
Gautham Karthik
Sanya Malhotra
Ashok Selvan

இது என்னடா ஆண்டவருக்கு சிம்பு மேல திடீர் கரிசனம் என்று எல்லோருக்குமே ஒரு சந்தேகம் இருந்துச்சு. அதுக்கு பேரு தரிசனம் எல்லாம் இல்ல, வியாபார யுத்தின்னு நிரூபிச்சிட்டார் கமல். சிம்பு STR 48 படத்திற்காக லண்டன் போயிருக்கிறார், நீளமா முடி வளர்த்திருக்கிறார் என ஏகத்துக்கும் கதைகள் அடித்து விடப்பட்டது.

இப்போதைய உண்மை நிலவரப்படி இந்த படம் தொடங்கப்படுமா இல்லை அப்படியே பூசணிக்காய் உடைத்து முடித்து விடுவார்களா என்ற சந்தேகத்தில் இருக்கிறது. இதுக்கெல்லாம் காரணம் ஆண்டவரின் ஏடாகூட ஆசைதான். அதாவது கொரோனாவுக்கு பிறகு OTT தளத்தின் ஆதிக்கம் அதிகமாகவே இருந்தது.

பெரிய பெரிய ஹீரோக்களின் படங்களை எல்லாம் கோடி கணக்கில் போட்டி போட்டு வாங்கினார்கள். விக்ரம் படம் ரிலீசுக்கு பிறகு திடீரென கமலுக்கு சினிமாவில் லாபம் பார்க்க ஆசை வந்துவிட்டது. அதற்கு அவர் நம்பிய ஒரே முயற்சி OTT வியாபாரம் தான். இதை தவிர மூன்று பிரம்மாண்ட படங்களில் நடித்து வருகிறார்,

Kalki 2898 AD
Indian 2
Thug Life

ஒப்புக்கு சப்பாணி தான் தக் லைஃப்

அதாவது அப்போது மார்க்கெட்டில் இருக்கும் நடிகர்களை தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் நடிக்க வைப்பது. ரிலீசுக்கு பிறகு நல்ல விலைக்கு படத்தை OTT தளத்திற்கு கொடுப்பது என்று ஒரு திட்டம் வைத்திருந்தார்.

இதற்காகத்தான் அடுத்தடுத்து சிவகார்த்திகேயன் மற்றும் சிம்புவை தன்னுடைய தயாரிப்பில் நடிக்க வைத்தார். டாடா படம் ரிலீஸ் ஆகி கவினுக்கும் பெரிய அளவில் ரீச் கிடைத்ததால் அடுத்து அவரை வைத்தும் ஒரு படம் பண்ணலாம் என்பது கமலின் திட்டம்.

ஆனால் இப்போது திடீரென தமிழ் சினிமா ரசிகர்களின் மார்க்கெட் OTT தளத்தில் குறைந்துவிட்டது. இதற்கு காரணம் பலதரப்பட்ட மொழி படங்களையும் சினிமா ரசிகர்கள் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் என்பதுதான்.

இதனால் STR 48 படத்திற்கு 100 கோடி பட்ஜெட்டை ஒதுக்க கமலுக்கு இப்போதைக்கு எந்த எண்ணமும் இல்லை. அதனால் தான் ஆறுதல் பரிசு கொடுப்பது போல் சிம்புவை தக் லைஃப் படத்தில் நடிக்க வைக்கிறார் கமல்.

இதில் இன்னொரு திட்டமும் இருக்கிறது ஒரு வேலை இந்த படம் ரிலீஸ் ஆன பிறகு சிம்புவின் மார்க்கெட் OTT தளத்தில் ஏறினால் அதை வைத்து STR 48 படத்தை இயக்குவதை பற்றி முடிவு செய்து கொள்ளலாம் என்பது இப்போதைக்கு கமலின் முடிவு.

பிளான் போடாமலேயே சிம்புவை வச்சு செய்யும் கமல்

Stay Connected

1,170,283FansLike
132,035FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -