அந்த 3 பேரை மொத்தமாக மறந்த கமல், சங்கர்.. பரபரப்பான பிரமோஷனால் கிளம்பிய சர்ச்சை

Indian 2: உலகநாயகன் கமலஹாசன் மற்றும் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இருவரும் தங்களுடைய கனவு படமான இந்தியன் 2 பிரமோஷன் வேலைகளில் படு பிசியாக இருக்கிறார்கள். இந்த படத்தில் நடித்த மனோபாலா, விவேக் மற்றும் நெடுமுடி வேணு படபிடிப்பில் இருந்த சமயத்திலேயே இறந்து விட்டார்கள்.

இவர்களுடைய ஒரு சில காட்சிகள் தொழில்நுட்ப உதவியாய் படமாக்கப்பட்டிருப்பதாக கூட தகவல்கள் வெளியானது. பல மேடைகளில் இவர்களைப் பற்றி கமல் மற்றும் சங்கர் பேசுவதை நாம் கவனத்தில் இருக்கிறோம்.

நிஜமாகவே இந்த பட குழு பேச வேண்டிய முக்கியமான மூன்று பேர் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி இவர்கள் பேச மறந்து விட்டார்களா அல்லது மறுக்கிறார்களா என தெரியவில்லை. இந்தியன் 2 படப்பிடிப்பு கடந்த 2019 ஆம் ஆண்டு ஆரம்பித்தது.

அந்த 3 பேரை மொத்தமாக மறந்த கமல், சங்கர்

பிப்ரவரி மாதம் 2019 ஆம் ஆண்டு ஈவிபி ஃபிலிம் சிட்டியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. பிரம்மாண்டமான காட்சியாக எடுக்க வேண்டும் என்று கிரேனில் பெரிய பெரிய விளக்குகளை கட்டி படபிடிப்பு பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

திடீரென கிரேன் அறுந்து விழுந்து மிகப்பெரிய விபத்து ஏற்படுகிறது. உதவி இயக்குனர் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விடுகிறார்கள். ஒன்பது பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இதனால் படப்பிடிப்பு பாதியிலேயே நிற்பதோடு சங்கர் முதல் கொண்டு கமலஹாசன் வரை போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று வருகிறார்கள். படப்பிடிப்பு இடத்தில் சரியான பாதுகாப்பு இல்லாததுதான் இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

அதாவது காட்சி நன்றாக வர வேண்டும் என்று பெரிய பெரிய விளக்குகளை கிரேனில் கட்டுகிறார்கள். அந்த கிரேன் குறிப்பிட்ட எடையை தான் தாங்கும் அளவு உடையது. எடையை மீறி விளக்குகள் கட்டும்போதே ஒரு பக்கமாக அந்த கிரேன் சாய்கிறது.

அதையும் பொருட்படுத்தாது படப்பிடிப்பு நடந்து கொண்டே இருக்கிறது. இதன் விளைவு தான் கிரேன் அறுந்து விழுந்தது. தங்களுடைய அலட்சியத்தால் மூன்று உயிர்கள் போயிருக்கிறது. ஆனால் அதை பற்றி எந்த மேடையிலுமே இவர்கள் பேசுவதாய் இல்லை.

பேச மறுக்கிறார்களா அல்லது அந்த கஷ்டமான சம்பவத்தை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வர வேண்டாம் என்று தயங்குகிறார்களா என தெரியவில்லை. படத்தின் டைட்டில் கார்டில் ஆவது அந்த மூணு பேரைப் பற்றி பேசுகிறார்களா என பார்ப்போம்.

Next Story

- Advertisement -