தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகும் கமல்.. அடுக்கடுக்காகப் போடும் கண்டிஷன்

கமல் அரசியலை விட்டு விட்டு தற்போது முழுநேரம் சினிமாவில் இறங்கி விட்டார். விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து இந்தியன் 2 படத்திலும் நடிக்கவிருக்கிறார். இந்தியன் 2 அடுத்து மகேஷ் நாராயணன் இயக்கும் படம் என வரிசையாக படங்களில் நடிக்க இருக்கிறாராம்.

இதனைத் தொடர்ந்து கமல் பல கண்டிசன்கள். போட்டு வருகிறார். இனி எடுக்கும் படங்கள் அனைத்தும் பான் இந்தியா படங்களாகவே எடுக்க விரும்புவதாக ஆணித்தரமாக முடிவெடுத்திருக்கிறாராம். அதனைத் தொடர்ந்து மல்டி ஸ்டார் படங்களிலும் அதிகம் கவனம் செலுத்தப் போகிறாராம்.

விக்ரம் படத்தில் நடித்த பகத் பாசில், விஜய் சேதுபதி போன்றோர்கள் அவரின் அடுத்த படத்திலும் நடிக்க இருப்பதாக செய்திகள் அடிபட்டு வருகிறது. மேலும் இந்தியன் 2 படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக வரவேண்டும் என்ற படத்தில் கதாநாயகன் உலகநாயகன் கமலஹாசன் மற்றும் படத்தின் இயக்குனர் சங்கர் இருவரும் ஆசைப்படுகின்றனர்.

ஆகையால் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கப்பட உள்ளதால், இதில் விஜய் சேதுபதி இருக்கிறாரா இல்லையா என்பது கூடிய விரைவில் தெரிந்துவிடும். அதுமட்டுமின்றி கமலஹாசன் அடுத்ததாக நடிக்கும் தேவர்மகன் 2 படத்திலும் விஜய் சேதுபதி எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

இந்நிலையில் இந்தியன் 2, தேவர் மகன் 2 படங்களுக்கு பிறகு, பிரபல மலையாள இயக்குனர் மற்றும் எடிட்டர் ஆனா மகேஷ் நாராயணன் படத்தின் இணைகிறார். இந்தப் படத்திற்கு உலகநாயகன் கமலஹாசன் தான் படத்திற்கான முழு ஸ்கிரிப்ட்டையும் எழுதினாராம்.

இந்தப் படத்தில் கமலுக்கு இணையான ஒரு செகண்ட் ஹீரோவையும் மகேஷ் நாராயணன் படத்திற்காக தேர்ந்தெடுத்து வருகிறார்களாம். அரசியலை விட்டுவிட்டு படங்கள் நடிப்பதில் இப்பொழுது முழு கவனம் செலுத்தி வருகிறார் உலகநாயகன். இது கமலின் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது.

Next Story

- Advertisement -