Ethirneechal 2: சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் சீரியல் கிட்டத்தட்ட 750 எபிசோடுகள் வந்த நிலையில் திடீரென்று ஒரு வாரத்திற்குள் முடிவு பண்ணி அவசர அவசரமாக கிளைமாக்ஸ் கொண்டு வந்து விட்டார்கள். ஆனால் கிளைமாக்ஸ் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாமல் முடிந்து விட்டது. அதற்கு காரணம் நாடகத்திற்கு ஏற்பட்ட நெகட்டிவ் விமர்சனங்களும், சன் டிவி சேனலில் இருந்து கொடுக்கப்பட்ட குடைச்சலும் தான்.
இதை ஏற்க மனம் இல்லாத ஜீவானந்தம் உங்கள் சகவாசமே வேண்டாம் என்று முடித்துக் கொள்ளலாம் என நினைத்து நாடகத்தின் இறுதி அத்தியாயத்தை கொண்டு வந்து விட்டார். ஆனால் ஒன்னு இல்லாத பொழுது தான் அதனுடைய ஏக்கம் அதிகமாக இருக்கும் என்று சொல்வார்கள். அதுபோல எதிர்நீச்சல் சீரியல் முடிந்தாலும் எப்பொழுது இதனுடைய இரண்டாம் பாகத்தை பார்க்கலாம் என்று ஆவலுடன் மக்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
கெத்தாக கொண்டுவரும் எதிர்நீச்சல் சீரியல் 2
அந்த வகையில் ஜீவானந்தம் கையில் 1500 எபிசோடு காண கதைகள் இருப்பதாலும் மக்கள் பேர் ஆதரவு கொடுத்து காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதனாலும் எதிர்நீச்சல் 2 சீரியலை துவங்க இருக்கிறார். ஆனால் தனக்கு பிரேம் டைம் கிடையாது என்று சொன்ன சன் டிவி பக்கம் மறுபடியும் போகக்கூடாது என்று முடிவு பண்ணி விட்டார்.
இந்த நிலையில் ஏற்கனவே கலைஞர் டிவி மூலம் ஒரு நாடகத்தை கொடுத்ததினால் உதயநிதி அவருடைய சேனல் பக்கம் மறுபடியும் வந்து எதிர்நீச்சல் 2 நாடகத்தை எடுக்க கூப்பிட்டு விட்டார். இந்த சூழ்நிலையில் இதற்கான ஆயத்த வேலைகளில் ஜீவானந்தம் என்கிற திருச்செல்வம் போய்க்கொண்டிருக்கும் நிலையில் சன் டிவி சேனலில் கலாநிதி மாறன் ஜீவானந்தத்திற்கு ஒரு வேண்டுகோள் கொடுத்திருக்கிறார்.
அதாவது இனி உங்கள் கதைகளிலும் நீங்கள் எடுக்கும் முடிவுகளில் நாங்கள் யாரும் தலையிட மாட்டோம். நீங்கள் எதிர்பார்த்தபடியே பிரேம் டைம் நாங்களே உங்களுக்கு கொடுக்கிறோம். ஆனால் எதிர்நீச்சல் 2 சீரியலை எங்கள் சேனல் மூலமாகத்தான் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று தொடர்ந்து ஜீவானந்தத்திற்கு குடச்சல் கொடுத்துட்டு வருகிறார்கள்.
இதனால் என்ன பண்ணுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும் தன்னுடைய சுயமரியாதைக்கு ஒரு அவமானம் ஏற்பட்ட நிலையில் மறுபடியும் போகக்கூடாது என்று ஒரு கெத்துடன் ஜீவானந்தம் இருக்கிறார். இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் எதிர்நீச்சல் 2 சீரியலின் கதையில் சில மாற்றங்களை கொண்டு வர இருக்கிறார்.
அதற்கான வேலைகளை செய்து கொண்டு வரும் பொழுது நான்கு சிங்க பெண்களை வைத்து கதையை எடுப்பதற்கு முடிவு பண்ணிவிட்டார். அந்த வகையில் ரேணுகா, ஈஸ்வரி, நந்தினி, சக்தி இவர்களின் ஆட்டம் மறுபடியும் தொடங்கும். அதே மாதிரி மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப இதில் முக்கிய கதாநாயகனாக சக்தியும் இடம்பெறப் போகிறார்.
ஆனால் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஜீவானந்தம் ஒரு லிஸ்ட் போட்டு அவருடைய டீமிடம் கொடுத்து இருக்கிறார். அந்த வகையில் பசுபதி, பொன்வண்ணன், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ராஜியின் அப்பாவாக நடிக்கும் முத்துவேல், இளவரசு மற்றும் இவர்களைத் தொடர்ந்து இன்னும் சில ஆர்டிஸ்ட்களையும் லிஸ்டில் சேர்த்து வைத்திருக்கிறார்.
அந்த வகையில் இவர்களில் யார் சூட்டாகுவார் என்பதை கணித்து அடுத்த கட்ட கதையை நகர்த்தப் போகிறார். இந்த இந்த தேர்வுகள் உறுதியான நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் எதிர்நீச்சல் 2 சீரியலை ஒளிபரப்பு செய்வார். ஆனால் சன் டிவியா மற்றும் கலைஞர் டிவி என்ற கேள்விக்குறி இருக்கிறது. பொதுவாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்ததால் அந்த நாடகத்திற்கு மக்களிடம் அமோக வரவேற்பு கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மை.
அதனால் கடைசியில் ஜீவானந்தம் எப்படியும் சன் டிவி மூலமாகத்தான் எதிர்நீச்சல் 2 சீரியலை கெத்தாக கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்நீச்சல் சீரியலின் சுவாரசியமான சம்பவங்கள்
- Gunasekaran: ரேணுகா மனக்கஷ்டத்தை போக்கிய சர்வாதிகாரி
- எதிர்நீச்சலை க்ளோஸ் பண்ண சன் டிவி மாறன் சொன்ன விஷயம்
- குணசேகரனுக்கு சாதகமாக அப்பத்தா சொன்ன ஒத்த வார்த்தை