Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் இப்பொழுது கண்ணாமூச்சி விளையாட்டு ஓடிக் கொண்டிருக்கிறது.
அதாவது ஜனனி, அஞ்சனா மற்றும் இவர்களுடைய அம்மாவை ராமசாமி மற்றும் கிருஷ்ணசாமி கடத்தி வைத்திருக்கிறார்.
அதே மாதிரி தர்ஷினியுடன் சித்தார்த்துக்கு திருமணம் நடக்கக்கூடாது என்பதற்காக கதிர், சித்தார்த்தை மறைத்து வைத்திருக்கிறார்.
இதற்கிடையில் ஜீவானந்தம், தர்ஷினியே போலீஸ் கையில் ஒப்படைத்து விட்டு எங்கே இருக்கிறார் என்று தெரியாத அளவிற்கு தலைமறைவாக இருக்கிறார்.
அதே மாதிரி குணசேகரன் குடும்பத்தை வேரோடு வெட்டி சாய்ப்பேன் என்று சவால் விட்டுப் போன கரிகாலன் மற்றும் ஜான்சி ராணி என்ன பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்பது புரியாத புதிராக இருக்கிறது.
அடுத்ததாக சாறுபாலா, ஆதிரைக்கும் அருணுக்கும் திருமணத்தை நடத்தி வைப்பேன் என்று சொன்ன விஷயம் அப்படியே காற்றிலே பறந்து விட்டது.
இப்படி ஒவ்வொரு விஷயமும் ஆரம்பிக்கப்பட்டு பாதியிலேயே என்ன நடக்குது என்று தெரியாமல் ஆடுபுலி ஆட்டம் ஆடி வருகிறார்கள்.
ஆனால் ராமசாமியை பொருத்தவரை ஜனனியை கடத்தி வைத்து விட்டால் சித்தார்த் எங்கே இருக்கார் என்று தெரிந்துவிடும் என்று ஒரு கணக்குப் போட்டு இருக்கிறார்.
அதே மாதிரி சித்தார்த்தை வைத்து எப்படியாவது ஜனனி மற்றும் அஞ்சனாவை கண்டுபிடித்து விடலாம் என்று கதிர் ஸ்கெட்ச் போட்டிருக்கிறார்.
இதற்கிடையில் குணசேகரன் மற்றும் உமையாள் நினைத்தபடி நிச்சயதார்த்தத்தை திருமணம் ஆக மாற்றுவதற்கு பல வழிகளில் முயற்சி செய்து வருகிறார்கள்.
ஆனால் கதிர் போட்ட பிளான் படி சித்தார்த்துக்கும் அஞ்சனாவுக்கும் தான் திருமணம் நடக்கப் போகிறது. இதனால் அசிங்கப்பட்டு அவமானத்துடன் நிற்கப்போவது குணசேகரன் மற்றும் உமையாள் தான்.
கடைசியில் உங்க சங்கார்த்தமே வேண்டாம் என்று கதறிக்கொண்டு உமையாள் ஓட போகிறார். அதே மாதிரி ஜீவானந்தத்தை கூட்டிட்டு வருகிறேன் என்று கொற்றவை வெறியுடன் தேடி போயிருக்கிறார்.
அந்த வகையில் ஜீவானந்தம் வந்துவிட்டால் குணசேகரின் உண்மையான சுயரூபம் தெரிந்துவிடும். அத்துடன் ஓவராக துள்ளிக் கொண்டு ஆட்டம் போட்ட குணசேகரனுக்கு ஒரு எண்டு கார்டு போட்டு விடுவார்கள்.
இதன் பிறகாவது அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் பல விஷயங்களை விறுவிறுப்பாக கொண்டு வந்தால் இன்னும் நாடகம் சுவாரஸ்யமாக அமையும்.