அதிக சம்பளம் கேட்டாலே ரெட் கார்டு.. இங்க தட்டி கேட்க ஆண்மை இருக்கா.? கொந்தளித்த பிரபலம்

producer-krajan
producer-krajan

80-களில் முன்னணி இயக்குனரும் தயாரிப்பாளருமான அந்த பிரபலம் சமீபகாலமாகவே திரைப்பட விழாக்களில் தொடர்ந்து கலந்துகொண்டு சர்ச்சைக்குரிய விவாதங்களில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றார், அந்த வகையில் ராஜேந்திர பிரசாத் மற்றும் சுந்தர் ஜி தயாரிப்பில் உருவான ‘கண்மணி பாப்பா’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

அதில் பங்கேற்ற தயாரிப்பாளர் தயாரிப்பாளர், கேரளாவில் அதிக சம்பளம் கேட்ட ஒருவருக்கு அங்குள்ள நடிகர்சங்கம் ரெக்கார்ட் கொடுத்தது. இந்த ஆண்மை தனம் இங்குள்ள சங்கத்திற்கு இருக்கிறதா என்ற சர்ச்சைக்குரிய கேள்வியை முன்வைத்தார். அதுமட்டுமின்றி அடுத்த வாரம் முதல்வரை சந்திக்க உள்ள கே ராஜன் தமிழ் பெயர்களை வைக்கும் படங்களுக்கு மட்டுமே மானியம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப் போவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் தமிழ் பேசும் நடிகைகளை தேர்வு செய்ய இயக்குனர்கள் மனசு வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார். பொதுவாக தயாரிப்பாளர்களுக்கு நடிகைகளை தேர்வு செய்வதற்கான முடிவு எதுவுமே இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். அதன் பிறகு ஜெய்பீம் படத்தில் இடம்பெற்ற காலண்டர் பற்றிக் கேட்ட போது நிச்சயம் தயாரிப்பாளருக்கு இதைப் பற்றி தெரிய வாய்ப்பில்லை.

ஏனென்றால் தயாரிப்பாளர்களை பொறுத்தவரை பணம் எவ்வளவு தேவை என்பதை மட்டுமே தெரிந்து கொள்வார்கள். அதைத்தவிர படப்பிடிப்பு எதுவுமே அவர்களுக்கு தெரிவதில்லை என்று கூறினார். மேலும் உங்கள் பார்வையில் சின்ன படம் என்றால் எது? என்ற கேள்விக்கு, என்னைப் பொறுத்தவரை பிகில் போன்ற நஷ்டத்தை ஏற்படுத்திய படமே சின்ன படம் என்றும், லாபத்தை ஈட்டிய படம் பெரிய படம் என்றும் குறிப்பிட்டார்.

ஏனென்றால் முதலில் படம் வெற்றி பெற்றால் மட்டுமே ஹீரோவுக்கு சம்பளம். ஆனால் தற்போது எடுக்கப்படும் படங்களில் ஹீரோயினுக்கு பொட்டு மேட்சிங்காக இல்லை என்ற சாக்குப்போக்கு சொல்லி ஒரு மணி நேரம் சூட்டிங்கை இழுத்தடிக்கின்றனர்.

இப்படியெல்லாம் செய்தால் தயாரிப்பாளருக்கு மட்டுமே நஷ்டம் வரும். ஒரு சின்ன படத்தை குறைந்தது 30 நாட்களில் இயக்குனர் எடுத்து முடிக்க வேண்டும் அப்படி செய்தால் தயாரிப்பாளருக்கு நிச்சயம் நஷ்டம் ஏற்படாது.  உண்மையில் படத்தின் ஹீரோ இயக்குனர் தான். அடுத்தபடியாக தான் படத்தில் நடிக்கும் ஹீரோ பெரிதாகப் பேசப் படவேண்டும் என்று கே ராஜன் தன்னுடைய பேட்டியில் பேசியுள்ளார்.

Advertisement Amazon Prime Banner