சத்தமே இல்லாமல் வேலை பார்த்துள்ள ஜோதிகா.. நயன்தாராவுக்கு இணையாக ஒரு ரவுண்ட் வரப்போறாங்க

தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த ஜோதிகா ஒரு காலகட்டத்தில் டஃப் நடிகர்களுடன் நடித்து சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தார். மேலும் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவில் இருந்து ஒட்டுமொத்தமாக ஒதுங்கி விட்டார். குழந்தைகள் ஓரளவு வளர்ந்த பிறகு மீண்டும் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுத்தார்.

ஆனால் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் தான் ஜோதிகா நடித்து வருகிறார். அதுவும் சூர்யா ஜோதிகாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனத்திற்கு தான் படம் பண்ணுகிறார். அதுவும் திருமணத்திற்கு பிறகு ஜோதிகா நடிப்பில் வெளியான படங்கள் பெரிய அளவில் எதுவும் வெற்றி பெறவில்லை.

Also Read : தோல்வி பயத்தில் கிளைமேக்ஸ் மாற்றப்பட்ட 5 தமிழ் படங்கள்.. இரண்டு முறை செத்து பிழைத்த ஜோதிகா

ஆனால் மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்டு வரவேண்டும் என்று ஜோதிகா சத்தமே இல்லாமல் ஒரு வேலை செய்துள்ளார். அதாவது இப்போது பாலிவுட்டில் ஒரு படம் ஜோதிகா நடித்து முடித்துள்ளாராம். கிட்டத்தட்ட 25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பாலிவுட்டில் ஜோதிகா ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

மேலும் அந்த படத்திற்கு ஸ்ரீ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதால் கனத்த இதயத்துடன் படக்குழுவில் இருந்து விலகுவதாக ஜோதிகா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதுமட்டுமின்றி தான் பணியாற்றிய படங்களில் இந்த படக்குழு மிகவும் சிறந்தது என்று கூறி உள்ளார்.

Also Read : ஹீரோக்களுக்கு நிகராக நடிப்பில் பிச்சு உதறும் 8 ஹீரோயின்கள்.. 44 வயசுலயும் அசத்தும் ஜோதிகா!

தற்போது வரை தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தை நயன்தாரா பிடித்துள்ளார். அதுமட்டுமின்றி நயன்தாராவுக்கு தற்போது பாலிவுட்டில் வாய்ப்பு கிடைத்து ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் நடித்து வருகிறார். ஆகையால் தற்போது நயன்தாராவுக்கு இணையாக ஜோதிகாவும் ஒரு ரவுண்ட் வர இருக்கிறார்.

மேலும் ஸ்ரீ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில் மற்ற வேலைகள் தற்போது மும்மரமாக நடந்து வருகிறதாம். மேலும் படம் குறித்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் மற்றும் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாக உள்ளது. இப்படம் ஜோதிகாவுக்கு கண்டிப்பாக ஒரு டர்னிங் பாயிண்டாக அமைய உள்ளது.

Also Read : சிம்ரன், ஜோதிகா ரெண்டு குதிரைகளையும் ஒரே சமயத்தில் ஓட்டுற போல.. விஜய் சொன்னதாக சர்ச்சையை கிளப்பும் வாரிசு நடிகர்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்