தோல்வி பயத்தில் கிளைமேக்ஸ் மாற்றப்பட்ட 5 தமிழ் படங்கள்.. இரண்டு முறை செத்து பிழைத்த ஜோதிகா

பெரிய நடிகர்களை வைத்து படம் எடுப்பதில் எந்த அளவுக்கு வெற்றி இருக்கிறதோ, அதே அளவுக்கு சிக்கல்களும் அதிகமாக இருக்கிறது. அந்த நடிகர்களுடைய ரசிகர்களை திருப்திப்படுத்தியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஒரு அழுத்தமாகவே இருக்கும். சில நேரங்களில் இயக்குனர்கள் தங்கள் விருப்பப்படி படத்தை எடுத்தாலும் ரசிகர்களுக்காக கிளைமேக்ஸை மாற்றி அமைப்பதும் உண்டு. சில படங்கள் ரிலீஸ் ஆகிய பின்பு கூட கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு இருக்கிறது.

கிரீடம்: 2007 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில், அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் கிரீடம். இந்த படத்தில் தன்னுடைய தந்தையின் ஆசையை நிறைவேற்ற போலீசாக நினைத்த அஜித், ரவுடி கும்பலை அடக்க களத்தில் இறங்குவார். இதனால் அஜித் போலீஸ் ஆக முடியாமல் போவது போல் படம் முடிக்கப்பட்டு இருக்கும். இந்த படத்திற்கு அஜித் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, ரிலீஸ் ஆகி 1 வாரம் கழித்து கிளைமேக்ஸ் மாற்றப்பட்டது.

Also Read: ஹீரோக்களுக்கு நிகராக நடிப்பில் பிச்சு உதறும் 8 ஹீரோயின்கள்.. 44 வயசுலயும் அசத்தும் ஜோதிகா!

நல்லவனுக்கு நல்லவன்: இயக்குனர் எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த் மற்றும் ராதிகா நடித்த திரைப்படம் எஸ். பி. முத்துராமன். இந்த படத்தின் கிளைமேக்சில் ராதிகா இறந்ததும் அவருடனே ரஜினியும் இறந்து விடுவது போல் படம் எடுக்கப்பட்டு இருக்கும். ரஜினியின் ரசிகர்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதால் கிளைமேக்ஸ் மாற்றி அமைக்கப்பட்டது.

வேட்டையாடு விளையாடு: இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கமலஹாசன் நடித்து மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் வேட்டையாடு விளையாடு. இந்த படத்தின் இறுதியில் ஜோதிகா செத்தது போல் முதலில் எடுக்கப்பட்டது. ஆனால் அந்த காட்சி மாற்றப்பட்டு ஜோதிகா காப்பாற்றப்பட்டு கமலை திருமணம் செய்வது போல் மாற்றப்பட்டது.

Also Read: சிம்ரன், ஜோதிகா ரெண்டு குதிரைகளையும் ஒரே சமயத்தில் ஓட்டுற போல.. விஜய் சொன்னதாக சர்ச்சையை கிளப்பும் வாரிசு நடிகர்

காக்க காக்க: கடந்த 2005 ஆம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா நடித்த காக்க காக்க திரைப்படம் ரிலீஸ் ஆனது. இதில் சூர்யாவை பழி வாங்க ரவுடி கும்பலால் கடத்தப்படும் கொல்லப்படுவது போல் காட்டப்பட்டு இருக்கும். அதன் பின்னர் ஜோதிகா உயிருடன் இருப்பது போல மாற்றப்பட்டு இருக்கிறது.

முகவரி: நடிகர் அஜித் நடிப்பில் 2000 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் முகவரி. முழுக்க முழுக்க இசையை மட்டுமே நேசிக்கும் இளைஞன் வாழ்க்கையில் ஜெயிக்க போராடுவதை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம். இதில் அஜித் தன்னுடைய இலட்சியத்தை விட்டு விட்டு வேலைக்கு செல்வது போலவும், அவர் காதலித்த ஜோதிகா வேறொருவரை திருமணம் செய்வது போலவும் முடிக்கப்பட்டு இருக்கும். அஜித் ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று ரிலீசுக்கு பின் கிளைமேக்ஸ் பாசிட்டிவாக மாற்றப்பட்டது.

Also Read: அஜித்துக்கு வில்லனாகும் வாய்ப்பை இழந்த வாரிசு நடிகர்.. துணிவுக்கு நோ சொன்னதன் பின்னணி

 

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்