வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

விஜய்யை தூக்கி எறிந்த ஜோதிகா.. படபிடிப்பில் சொல்லாமல் போன கொடுமை, வருத்தப்பட்ட தளபதி.!

விஜய்யுடன் குஷி மற்றும் திருமலை என்ற மெகா ஹிட் படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ஜோதிகா. இவர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டு பல வருடங்களாக நடிப்பதை தவிர்த்தார். அதன்பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ் சினிமாவில் செகண்ட் இன்னிங்சை தொடங்கிய ஜோதிகா, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்துக் கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில்தான் அவருக்கு விஜய்யுடன் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதற்கான படப்பிடிப்பில் எல்லாம் கலந்து கொண்ட பின், அந்தப் படத்தை தூக்கி எறிந்திருக்கிறார். தளபதியா இருந்தா என்ன! யாரா இருந்தா என்ன, எனக்கு கதை தான் முக்கியம் என்று படப்பிடிப்பு தளத்திலிருந்து விஜய்யிடம் சொல்லாமலேயே கிளம்பி விட்டாராம்.

Also Read: சூர்யா மும்பையில் வீடு வாங்க இதுதான் காரணம்.. ஜோதிகாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

2017 ஆம் ஆண்டு அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படம் 200 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தில் தளபதி வெற்றிமாறன், வெற்றி, மாறன் உள்ளிட்ட மூன்று கேரக்டரில் விஜய் நடித்திருப்பார்.

இதில் ஜோதிகாவிற்கு விஜய்யுடன் நடிக்க வாய்ப்பு வந்தது. மெர்சல் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஐஸ்வர்யா என்ற கேரக்டரில் நித்யா மேனன் நடித்திருப்பார். அந்த கதாபாத்திரம் ஜோதிகாவுக்கு தான் அமைக்கப்பட்டது. படப்பிடிப்பிலும் இரண்டு நாட்கள் கலந்து கொண்டார்.

Also Read: சொந்த மண்ணுக்கு டாட்டா காட்டி மும்பைக்கு சென்ற ஜோ.. மனைவிக்காக பல கோடிகளை வாரி இறைக்கும் சூர்யா

ஆனால் அந்த கதாபாத்திரத்தில் சில மாற்றங்களை ஜோதிகா கொண்டு வரச் சொன்னார். அது முடியாது என்று அந்த படத்தின் இயக்குனர் அட்லி சொல்லிவிட்டாராம். பின்பு எனக்கு இது சரிப்பட்டு வராது என்று விஜய்யிடம் கூட சொல்லாமல் கிளம்பி விட்டார். இது விஜய்க்கு மிகுந்த வருத்தத்தை அளித்ததாம்.

ஜோதிகா நீண்ட இடைவெளிக்கு பிறகு தன்னுடன் இணைந்து நடிக்கிறார் என்று விஜய்க்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்திருக்கிறது. ஆனால் திடீரென்று படத்தின் கதை பிடிக்காமல், இந்த படம் வேண்டாம் என்று ஜோதிகா விலகியதால் விஜய் வருத்தப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

Also Read: ஜோதிகாவை காதலித்து வளைத்து போட நினைத்த 4 ஹீரோக்கள்.. ஜோவை விட்டு வைக்காத அந்த வாரிசு நடிகர்

- Advertisement -

Trending News