சிம்ரனால் கடுப்பான ஜோதிகா.. முட்ட கண்ணை உருட்டி சந்திரமுகியாக மாறி வெங்கட் பிரபுவுக்கு கொடுத்த நோஸ் கட்

Simran-Jyothika: வெங்கட் பிரபுவை பொருத்தவரையில் அவர் எப்போதுமே கலகலப்பாக ஜாலியாக இருக்கக்கூடியவர். தன்னைச் சுற்றி இருப்பவர்களிடமும் அவர் அதே உற்சாகத்தோடு தான் இருப்பார். ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட பிக்னிக் செல்வது போன்ற ஒரு மனநிலையில் தான் அவர் இருப்பார் என்று அனைவருக்கும் தெரியும்.

அதனாலேயே அவர் எதார்த்தமாக ஜோதிகாவிடம் ஒன்று பேசி நன்றாக வாங்கி கட்டிக் கொண்டிருக்கிறார். அதாவது வெங்கட் பிரபு இப்போது தளபதி 68 படத்தின் வேலைகளில் மிகவும் பிசியாக இருக்கிறார். அதில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஜோதிகாவை அணுகி இருக்கிறார். ஆனால் அவர் நடிக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

Also read: நீதான் என் உயிர் என்று திருமணம் வரை சென்று கழட்டிவிட்ட 5 ஜோடிகள்.. சதியால் பிரிந்து போன சிம்ரன்

நீண்ட வருட இடைவெளிக்குப் பிறகு விஜய், ஜோதிகா ஜோடி மீண்டும் இணையும் என்ற எதிர்பார்த்த வேளையில் இந்த செய்தி பலருக்கும் ஏமாற்றமாகத்தான் இருக்கிறது. இது குறித்து விசாரித்து பார்த்ததில் ஒரு விஷயமும் சிக்கி இருக்கிறது. அதாவது வெங்கட் பிரபு இந்த படத்தின் கதையை ஜோதிகாவிடம் கூறிய போது சிம்ரன் கூட இது போன்று நடித்திருக்கிறார் என்று எதார்த்தமாக வாயை விட்டு இருக்கிறார்.

உடனே ஜோதிகா தன் முட்ட கண்ணை உருட்டி சந்திரமுகியாகவே அவதாரம் எடுத்திருக்கிறார். ஏனென்றால் தளபதி 68 படத்தில் அப்பா விஜய்க்கு தான் ஜோதிகா ஜோடியாக நடிக்க வேண்டும் என்று வெங்கட் பிரபு கேட்டிருக்கிறார். அப்படி என்றால் மகன் விஜய்க்கு நான் அம்மாவா என்று கொதித்துப் போன ஜோ தன் நெற்றிக்கண்ணை திறந்து இருக்கிறார்.

Also read: சிம்ரன் வில்லியாக மிரட்டிய 5 படங்கள்.. பொறாமையில் லைலாவை படாத பாடு படுத்திய பானு

அதாவது சிம்ரன் வாரணமாயிரம் படத்தில் அப்பா சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருப்பார். அதேபோன்று வயதான தோற்றத்தில் அம்மாவாகவும் நடித்திருப்பார். அதைத்தான் வெங்கட் பிரபு உதாரணமாக சொல்லி இருக்கிறார். ஆனால் ஜோதிகா என் லெவலுக்கு அப்படியெல்லாம் நடிக்க முடியாது என்று வந்த வாய்ப்பை வேண்டாம் என்று மறுத்திருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் சிம்ரன் இந்த கதாபாத்திரத்திற்கு செட் ஆவாங்க அவர்களிடமே கேட்டுக்கோங்க என்று முகத்தில் அடித்தார் போல் கூறிவிட்டாராம். இதனால் நொந்து போன வெங்கட் பிரபு அடுத்து என்ன செய்வது என்ற யோசனையில் இருக்கிறாராம். அந்த வகையில் முன்னணி நடிகை ஒருவர் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Also read: கொஞ்சம் கூட கூச்சநாச்சமே இல்லாமல் ஜோதிகாவுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டர்.. தளபதி 68-ல் இருந்து விலகிய காரணம் இதுதான்!

Stay Connected

1,170,287FansLike
132,026FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -