கொஞ்சம் கூட கூச்சநாச்சமே இல்லாமல் ஜோதிகாவுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டர்.. தளபதி 68-ல் இருந்து விலகிய காரணம் இதுதான்!

Thalapathy 68: லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வர இருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து இவருடைய 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கப் போகிறது. இதற்கான ஒவ்வொரு வேலைகளும் தற்போது மெதுமெதுவாக தொடங்கிவிட்டது.

அந்த வகையில் இதில் இரண்டு கேரக்டரில் விஜய் அப்பா, மகன் கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார். அதற்காக மகன் கேரக்டரில் விஜய்யை இளமையாக காட்டுவதற்கு அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஸ்கேனிங் மூலம் VFX டெக்னாலஜியை பயன்படுத்துவதற்காக படக்குழு அனைவரும் போயிருக்கிறார்கள்.

Also read: ஒரே படத்தில் ஒரேடியாக உயர்ந்த லோகேஷ், நெல்சனின் சம்பளம்.. இதுக்கு தான் பெரிய இடத்து சகவாசம் வைக்கணும் போல

அடுத்தபடியாக இதில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியானது. ஆனால் தற்போது இவர் நடிக்க முடியாது என்று மறுத்து விட்டதாக செய்தி உலா வருகிறது. இது சம்பந்தமான காரணமும் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது அப்பா விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடிப்பதாக இருந்ததாம்.

அப்படி என்றால் விஜய்க்கு அம்மாவாக நடிப்பதும் தான். இதை தெரிந்ததும் அலறடித்து ஓடிவிட்டாராம். அதாவது இவர் ஏற்கனவே அம்மா கேரக்டரில் சில படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் அது அனைத்தும் சிறு வயது குழந்தைகளாக இருந்ததனால் ஓகே சொல்லி நடித்திருக்கிறார்.

Also read: ஆடியோ லான்ச் வேண்டவே வேண்டாம்.. நியாயமாய் விஜய் கூறும் 5 விஷயங்களால் லோகேஷ்க்கு செக்

ஆனால் இதில் விஜய்யின் அம்மா என்று கொஞ்சம் கூட கூச்சநாச்சமே இல்லாமல் ஜோதிகாவிற்கு இந்த கேரக்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த மாதிரி ஒரு கதாபாத்திரம் எனக்கு தேவை இல்லை என்று வெறுத்துப் போய் ஓடிவிட்டாராம். என்னதான் படமாக இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா என்று ஜோதிகா புலம்பித் தவித்து இருக்கிறார்.

அதனால் தற்போது இவருக்கு பதிலாக சிம்ரன் மற்றும் சினேகாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இவர்களில் யாராவது ஒருவர் இந்த வாய்ப்பை மிஸ் பண்ண மாட்டார்கள். அதனால் தளபதி 68 படத்தில் ஜோதிகா விஜய்க்கு ஜோடியாக நடிக்கவில்லை.

Also read: முதல் நாள் முதல் காட்சியை பார்த்து அலப்பறை செய்த விஜய்.. வைரலாகிப் பரவும் புகைப்படம்

- Advertisement -