ஆர்ஆர்ஆர் 2ம் பாகம் உருவாகுமா.? பளிச்சுன்னு உண்மையை கூறிய ராஜமவுலி

ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் உள்ளிட்டோர் நடித்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. ஆங்கிலேயர் கால கட்டத்தில் நடந்த சில சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

பாகுபலி, பாகுபலி 2 உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய ராஜமவுலி, அதற்குப்பின் 3 வருடங்கள் உருவாக்கப்பட்ட திரைப்படம் ஆர் ஆர் ஆர் ரத்தம்,ரணம், ரௌத்திரம் எனும் டைட்டிலோடு தமிழில் வெளியாகிய இத்திரைப்படம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ராம்சரனின் இயல்பான நடிப்பும் ஜூனியர் என்டிஆரின் நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது. இதனிடையே இத்திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக பல மாநிலங்களில் வெற்றி விழா நடைபெற்று வருகிறது.

இதனிடையே சமீபத்தில் இப்படத்தின் வட மாநில வெளியீட்டு உரிமையை வாங்கிய பென் ஸ்டூடியோஸ் நிறுவனம் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக ஒரு விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்த விழாவில் நடிகை ஆலியா பட் நடிகர் அமீர் கான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நகைச்சுவையாக பல உரையாடல்களை நிகழ்த்தினார் ரசிகர்கள் புடைசூழ ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. அப்போது ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் உள்ளிட்டோர் இயக்குனர் ராஜமவுலி இடம் ஒரு கோரிக்கை விடுத்தனர்.

இந்த விழாவில் இயக்குனர் ராஜமவுலி இடம் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் பாகம் 2 எப்போது எடுக்கப் போகிறீர்கள், அதற்கு நாங்கள் நடிக்க ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறோம் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ராஜமௌலி ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பேன் ஆனால் அதற்கு சில காலம் எனக்கு தேவைப்படுகிறது. அதுவரை பொறுத்திருங்கள் என்று அன்போடு கூறினார்.

மேலும் ஆர்.ஆர்.ஆர் திரைப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கினால் பாக்ஸ் ஆபீஸில் வெற்றிபெறும் என்பதற்கு மட்டுமல்லாமல் என் தம்பிகளான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் உடன் மீண்டும் அதிக நேரம் செலவிடலாம் என்று ராஜமவுலி நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார். இருந்தாலும் இன்னும் சில காலம் போகட்டும் என்று அவர் வெளிப்படையாக கூறியுள்ளார்.

இயக்குனர் ராஜமவுலி தன்னுடைய அடுத்த படத்தை தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் நடிப்பில் உருவாக்க உள்ளார். இந்த படத்தின் கதை எழுதும் பணியும் வேகமாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மகேஷ் பாபு மற்றும் ராஜமவுலி இருவரின் கூட்டணியில் உருவாக இருக்கும் முதல் படம் இதுவே என்பதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Next Story

- Advertisement -