இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 7 படங்கள்.. வீடு தேடி மிரட்ட வரும் அரண்மனை 4

Theater And OTT Movies: கடந்த வாரம் விஜய் சேதுபதியின் மகாராஜா தியேட்டரில் வெளியானது. முதல் நாளிலேயே வசூலில் சக்கை போடு போட்ட இப்படம் தற்போது 35 கோடிகளைத் தாண்டி வசூலித்துள்ளது. இன்னும் சில நாட்களில் இது 50 கோடியை தாண்டி விடும்.

அதைத்தொடர்ந்து இந்த வாரம் நான்கு படங்கள் தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது. அதில் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் குங்குமராஜ், வைரமாலா நடித்திருக்கும் ரயில் வரும் 21ஆம் தேதி வெளியாகிறது. முதலில் வடக்கன் என பெயரிடப்பட்டிருந்த இப்படம் சில காரணங்களால் மாற்றப்பட்டது.

அடுத்ததாக ஷாஜி சலீம் இயக்கத்தில் விதார்த் ஸ்வேதா நடித்திருக்கும் லாந்தர் படமும் 21ஆம் தேதி வெளியாகிறது. ஒரே இரவில் நடக்கும் சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் பாணியில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ராகுல் கபாலி இயக்கத்தில் ஜேடி, குரு சோமசுந்தரம் நடிப்பில் உருவாகி இருக்கும் பயமறியா பிரம்மை வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. அடுத்ததாக சாய் தன்ஷிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சட்டம் என் கையில் 21ம் தேதி வெளியாகிறது. இது தெலுங்கு படத்தின் டப்பிங் ஆகும்.

டிஜிட்டலுக்கு வரும் அரண்மனை 4

இப்படியாக நான்கு படங்கள் தியேட்டரில் வெளியாகிறது. அதேபோல் ஓடிடி தளத்தில் மூன்று படங்கள் வெளியாக இருக்கிறது. அதில் சுந்தர் சியின் அரண்மனை 4 வரும் 21 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.

100 கோடியை தாண்டி வசூலித்த இப்படம் ஓடிடியிலும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு அடுத்ததாக அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியான ரசவாதி 21ஆம் தேதி ஆஹா தமிழ் தளத்தில் வெளியாகிறது.

மேலும் வாணி போஜன், யோகி பாபு நடித்திருக்கும் சட்னி சாம்பார் வெப் சீரிஸ் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாக இருக்கிறது. ஆனால் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இப்படியாக இந்த வார இறுதி ஏழு படங்களால் கலை கட்ட இருக்கிறது.

தியேட்டர் ஓடிடியில் வெளியாகும் படங்கள்

Next Story

- Advertisement -