புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

வனிதாவை விட ஸ்மார்ட் ஆக பிளே பண்ணும் ஜோவிகா.. எல்லாரையும் சிக்கவச்சிட்டு எஸ்கேப் ஆன தந்திரம்

Jovika: 18 போட்டியாளர்களுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை துவங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. அதிலும் வனிதாவின் மகள் ஜோவிகா வீட்டில் இருப்பவர்களை காட்டிலும் சின்ன பெண்ணாக இருப்பதால் எப்படி அவர் தாக்கு பிடிப்பார் என்றும் யோசித்தனர். ஆனால் வனிதாவை விட ஜோவிகா செம ஸ்மார்ட் ஆக பிளே பண்றார்.

எல்லாரையும் கூலாக ஹேண்டில் பண்ணுவதுடன் தந்திரமாகவும் செயல்படுகிறார். நேற்று நடந்த வெயிட் பார்ட்டி டாஸ்கில் தோற்றுவிட்டால் மேக்கப் பொருட்கள் அனைத்தையும் பிக் பாஸ் பறித்து விடுவதாக சொன்னார். அந்த டாஸ்க்கை ஜெயிக்க வேண்டாம், தோற்று விட்டு பெண் போட்டியாளர்கள் மேக்கப் இல்லாமல் இருக்க வைத்தால் அது நமக்கு சாதகமாக இருக்கும் என்று பிரதீப் மட்டமாக பிளான் போட்டார்.

Also read: பயங்கர டஃப் கொடுப்பார் என்று நினைத்தால் டம்மி பீசா இருக்காரு.. நடிகரை கலாய்த்து தள்ளும் ஹவுஸ் மேட்ஸ்

கடைசியில் அந்த முடிவை யாரும் ஏற்றுக் கொள்ளாததால், அந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடி ஜெயிச்சு விட்டனர். பெண் போட்டியாளர்களான பூர்ணிமா ரவி, அக்ஷயா, மாயா, ஜோவிகா போன்றோர் பிரதீப் மூஞ்சியில் கரியை பூச வேண்டும் என தங்களுடைய மேக்கப் எல்லாம் கலைக்க முடிவெடுத்தனர்.

முன்பு மேக்கப்பை கலைப்பதாக ஒத்துக்கொண்ட ஜோவிகா திடீரென்று தன்னுடைய முடிவை மாற்றிக் கொண்டு மேக்கப்பை கலைக்க முடியாது என பல்டி அடித்தார். மற்ற போட்டியாளர்கள் மட்டும்தான் மேக்கப்பை ரிமூவ் செய்தார்கள். இப்படி எல்லாரையும் சிக்கவச்சிட்டு தந்திரமாய் இவர் மட்டும் எஸ்கேப் ஆகிவிட்டார்.

Also read: அடிச்சு வாய ஒடச்சிடுவேன், போடா லூசு.. 5வது நாளே கலவர பூமியாக மாறிய பிக் பாஸ் வீடு

இது மட்டுமல்ல பவா செல்லதுரை கதை சொல்லும் போது சர்ச்சைக்குரிய இடத்தில் முகம் சுளிப்பது, சிறுவயதாக இருந்தாலும் மற்ற போட்டியாளர்களை பெயர் சொல்லி அழைப்பது, எந்த விஷயத்திற்கு பேசணுமோ அந்த விஷயத்திற்கு செம போல்டாக பேசுவது, பாயிண்ட் பிடித்து மற்ற போட்டிகளர்களை மடக்குவது என ஜோவிகா மாஸ் காட்டுகிறார்.

மேக்கப் இல்லாமல் நாங்க அழகு தான் என ஆணித்தரமாக சொல்லிவிட்டு இவர்களுக்காக எதற்கு மேக்கப்பை கழட்டனும் என்று எடுத்து முடிவிலிருந்து பின் வாங்கியது என ஒவ்வொரு விஷயத்திலும் சொந்தமாக முடிவெடுக்கிறார். இவருடைய அம்மா வனிதா போல ரகட்டாக இல்லாமல் வெற்றிக்கு எது முக்கியம் என்பதை மனதில் தெளிவாக நிறுத்தி தந்திரமாக விளையாடுகிறார்.

Also read: யோக்கியன் மாதிரி கவினை அடிச்சீங்க பிரதீப், இந்த லிப்லாக் சீன் எடுக்க 8 டேக்கா.? காட்டுத் தீயாய் வைரலாகும் புகைப்படம்

- Advertisement -

Trending News