சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

மூர்த்தியின் அருமையை புரிந்து கொள்ளும் ஜீவா.. அண்ணன் அண்ணியை விட்டுக் கொடுக்காத கதிர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து கதை நகர்ந்து வருகிறது. தற்போது முல்லையின் அம்மா வீட்டுக்கு வந்து தனத்திடம் நீ உங்க அம்மா வீட்டுக்கு போய்விடு. நான் என் பொண்ண இங்கிருந்து பார்த்துக்கிறேன். ஒரே வீட்டில் இரு கர்ப்பிணி பெண்கள் இருக்கக் கூடாது என்று கொஞ்சம் மனசு கஷ்டப்படும்படி பேசி விட்டார். இந்த அவமானத்தினால் வீட்டை விட்டு கிளம்பலாம் என்று தனம் மற்றும் மூர்த்தி முடிவெடுத்து விடுகிறார்கள்.

இதை தெரிந்து கொண்ட கதிர், முல்லை இடம் இதற்கெல்லாம் காரணம் உன்னுடைய அம்மா தான் இருக்கும் என்று அவரிடம் போய் கேட்க ஆமாம் நான் தான் சொன்னேன் இதுல என்ன தப்பு இருக்கு என்று சொல்கிறார். இந்த மாதிரி எல்லாம் பேசி எங்க அண்ணன் அண்ணியை கஷ்டப்படுத்தினால் இங்கே வராதீர்கள். இதுதான் கடைசியாக இருக்கணும் இல்லைன்னா உங்களுக்கு பிடிக்கலை என்றால் நீங்க வீட்டை விட்டு போங்க என்று சொல்லிவிடுகிறார்.

Also read: எல்லையே மீறிய கதிர்.. அவமானப்பட்ட ஞானம், சக்தியை காப்பாற்றிய கௌதம்

மறுபடியும் இந்த ஆத்திரத்தில் முல்லையின் அம்மா தனத்திடம் வஞ்சகமாக பேசுகிறார். இதை பார்த்த கதிர் மற்றும் முல்லை தயவு செய்து வெளில போங்க இல்லனா வேற மாதிரி பிரச்சினை ஆகி விடும் என்று முல்லையின் அம்மாவை துரத்தி விடுகிறார். இதெல்லாம் பார்த்த தனம் நம்மளால் தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என்று வருத்தப்படுகிறார். எந்த விதத்திலும் அண்ணன் அண்ணி அவமானப்பட்டு விடக்கூடாது என்ற ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்யும் கதிர் சூப்பர்.

இன்னொரு பக்கம் மீனாவின் அப்பாவால் ஜீவா தொடர்ந்து அவமானங்களை சந்தித்துக் கொண்டு இருப்பதால் அவருடைய அடி மனதில் அண்ணன் வீட்டிற்கு போகலாம் என்று ஒரு எண்ணம் தோன்றுகிறது. இதுவே இப்படி தொடர்ந்து நடந்தால் கண்டிப்பாக ஜீவா, மூர்த்தியிடம் போய் சேர்ந்து விடுவார். இதற்கு தான் மீனாவும் ஆசைப்பட்டு இருக்கிறார். என்னதான் அப்பாவின் வீட்டில் ராணி மாதிரி இருந்தாலும் மீனாவிற்கு எப்போதுமே புகுந்த வீடு தான் ரொம்ப பிடிக்கும்.

Also read: கோபியை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய பாக்கியா.. ராதிகா கேட்டதும் சரிதானே

அடுத்ததாக ஐஸ்வர்யா கண்ணனை பார்க்க அத்தாட்சி பலகாரம் செய்து கொண்டு வருகிறார். உடனே ஐஸ்வர்யா இவரை எப்படியாவது ஐஸ் வைத்து பணம் கேட்கலாம் என்று முடிவுடன் அத்தாட்சியின் கை காலை பிடித்து விட்டு எனக்கு கொஞ்சம் பணம் வேண்டும் என்று கேட்கிறார். உடனே அவர் என்னிடம் ஏது பணம் என்று சொல்ல அதற்கு வேறு யாரிடமாவது கடன் வாங்கி கொடுங்கள் என்று கேட்கிறார்.

இப்படி கடனுக்கு மேல கடன் வாங்கி நடுத்தெருவுக்கு தான் வந்து நிற்கப் போகிறார்கள். கண்ணனும் ஊமை மாதிரி எல்லாத்துக்கும் தலையாட்டி கிட்டு இருக்கிறான். நிஜமாவே கண்ணனுக்கு வேலை போனால் மட்டும்தான் கூட்டு குடும்பத்தின் அருமையும் புரியும் ஐஸ்வர்யாவும் திருந்துவார். இந்த நாடகத்தை பார்க்கிறவர்களும் தற்போது இதை தான் எதிர்பார்க்கிறார்கள். இவர்கள் அக்கப்போர் எங்கே போய் முடிய போகுது என்று பார்க்கலாம்.

Also read: குணசேகரனை விட டபுள் மடங்கு மிஞ்சிய கதிர்.. திருப்பி அடிக்கும் ஜனனி

- Advertisement -

Trending News