ரோகிணி கண்ட கனவை தரைமட்டமாக ஆக்கப் போகும் ஜீவா.. முத்துவிடம் வசமாக சிக்கிக் கொள்ளும் சதிகாரி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், பாட்டி சொன்னபடி ஒவ்வொரு வாரமும் தூங்கும் அறையை மாற்றிக் கொண்டு படுத்துக்கலாம் என்று முத்து ஓகே சொல்லிவிட்டார். அதன்படி இந்த வாரம் முழுவதும் முத்து மீனா, மனோஜ் ரூமில் தான் தூங்க வேண்டும். ஆனால் சொகுசாக இருந்த மனோஜ்க்கு வெளியில் போய் தரையில் தூங்க இஷ்டமே இல்லை.

இருந்தாலும் வேறு வழி இல்லாமல் வெளியே தூங்க போய் விடுகிறார். ஆனால் வெளியே வந்ததும் ஏசி இல்ல பெட்டு இல்ல என்று புலம்பிக்கொண்டே இருக்கிறார். உடனே விஜயா இதற்கு தான் ஹாலில் ஒரு ஏசி மாட்டிக்கலாம் என்று ஸ்ருதி அம்மா சொன்னார்கள். அதை அவரே வாங்கியும் தருவதாக சொன்னார்.

அந்தர்பல்டி அடித்த ரோகிணி

உடனே அண்ணாமலை எந்த சொகுசு வாழ்க்கையும் இல்லாமல் தான் நாம் திருமண வாழ்க்கையை ஆரம்பித்தோம். இத்தனை வருட காலமாக சந்தோசமாக இருக்கலையா என்று சொல்கிறார். பிறகு ஒரு வழியாக மனோஜ் ரூமுக்கு முத்து மீனா தூங்க போய்விடுகிறார்கள். ஆனால் இந்த மக்கு மனோஜ் அடிக்கடி கதவைத் தட்டி தொந்தரவு பண்ணி வருகிறார்.

பிறகு ரோகிணி இதற்கெல்லாம் சேர்த்து வைத்து சுருதி பிரச்சனை பண்ணுவார். அதுவரை நாம் பொறுத்துக் கொள்ளலாம் என்று மனோஜிடம் சொல்கிறார். இதற்கு இடையில் பாட்டி மீனாவுக்கு அறிவுரை கூறுகிறார். அதாவது எப்படி நல்ல மருமகளாக இருக்கிறோமோ அதற்கு ஏற்ற மாதிரி புத்திசாலித்தனமும் இருக்க வேண்டும். யாருக்கும் நீ வேலைக்காரி மாதிரி சேவகம் எல்லாம் பண்ண வேண்டாம் என்று சொல்கிறார்.

இதனை தொடர்ந்து ரோகிணி மற்றும் மனோஜ் ஷோரூமை வாங்கும் கடைக்கு நண்பர்களை கூட்டிட்டு போயி காட்டுகிறார்கள். அப்பொழுது வழக்கம்போல் மனோஜ் கொஞ்சம் அதிக பிரசிங்கத்தனமாக நடந்து கொள்கிறார். அத்துடன் இன்னும் இரண்டு நாட்களில் இந்த கடைக்கு தேவையான எல்லா வேலைகளையும் முடித்துக் கொள்ளலாம். பின்பு நாங்கள் கடைக்கு பெயர் மாற்றிக் கொள்கிறோம் என்று ரோகினி சொல்கிறார்.

ஏற்கனவே விஜயா பெயர்தான் வைக்க வேண்டும் என்று முத்து பிளாக்மெயில் பண்ணியதால் ரோகிணி மனோஜ்க்கு வேற வழியே இல்ல கடைக்கு விஜயா பெயரை தான் வைக்கப் போகிறார்கள். அடுத்தபடியாக இந்த கடையை பிரபலமாக வேண்டுமென்றால் ஏதாவது ஒரு செலிபிரிட்டியை வைத்து திறக்கலாம் என்று பேச்சுவார்த்தை போய்க் கொண்டிருக்கிறது. அதற்கு முத்து, அம்மா பாட்டியை தவிர வேறு யாரையும் வச்சு கடையை திறக்க கூடாது என்று சொல்கிறார்.

இதை எதிர்பார்க்காத விஜயா பாசத்துடன் முத்துவை பார்க்கிறார். உடனே ரோகினி அந்தர்பல்டி அடித்து அத்தை உடைய ஆசீர்வாதம் கிடைத்தாலே நமக்கு போதும். அதனால் அத்தை வந்து கடை திறக்கட்டும் என்று சொல்கிறார். ஆனால் கடை திறக்கும் பொழுது ஜீவா மூலம் ரோகிணிக்கு பிரச்சனை ஆரம்பமாகப் போகிறது.

பெரிய பணக்காரங்களாக மாறி மனோஜை கைக்குள்ளே போட்டுக்கலாம் என்று கனவு கண்ட ரோகிணிக்கு எல்லாம் தரமட்டமாக இடிந்து விழப்போகிறது. அதுவும் முத்து மூலமாகத்தான் ரோகிணி ஜீவாவிடம் இருந்து 30 லட்சம் ரூபாயை வாங்கி இருக்கிறார் என்ற விஷயம் தெரிய வரப்போகிறது. இந்த ஒரு சந்தர்ப்பத்துக்கு தான் அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறோம் என்பதற்கு ஏற்ப ரோகினிக்கு ஒரு தரமான சம்பவம் நடக்கப் போகிறது.

- Advertisement -