மானத்தை வாங்க சந்தர்ப்பம் பார்க்கும் ஜான்சி ராணி.. அடி மேல் அடி வாங்கும் எதிர்நீச்சல் குணசேகரன் 

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் ஆனது டிஆர்பி லிஸ்டில் அசுர வேகத்தில் முன்னேறி வருகிறது. தொடர்ந்து ரசிகர்களின் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து முதலிடத்தை பிடித்து வருகிறது. அதிலும் அருண், ஆதிரா காதல் விவகாரம் குடும்பத்தில் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. 

இதனைத் தொடர்ந்து குடும்ப கவுரவம் தான் முக்கியம் என்று குணசேகரன் ஒரு பக்கமும், தனது காதல் தான் முக்கியம் என்று ஆதிரா மறுபக்கமும் இருந்து வந்துள்ளனர். மேலும் அண்ணனின் கொடூரத்தனத்தால் ஆதிரா விபரீத முடிவை எடுத்துள்ளார். இதனால் குணசேகரன் குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் சொத்தையே ஆட்டைய போட நினைக்கும் ஜான்சிராணியும் கதி கலங்கியுள்ளார்.

Also Read: குணசேகரனை அவமானப்படுத்திய ஜான்சி ராணி.. எதிர்நீச்சலில் கரிகாலனை அந்தரத்தில் விட்ட ஆதிரா

இந்நிலையில் அருண் தன்னால் தான் ஆதிரா இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார் என்று மனம் நொந்து பேசி வருகிறார். இதில் ஒரு பக்கம் கரிகாலன் காதல் கிறுக்கன் போல் ஆதிராவையே நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இவருடைய அம்மாவோ பெரிய இடத்து சம்மந்தம் எப்படியாவது, ஆதிராவின்  திருமணத்தின் மூலம் பணத்தை வாங்கி விடலாம் என்ற மிதப்பில் இருந்து வருகிறார்.

மேலும் குணசேகரனின் ஆணவப் பிடியில் தற்பொழுது கதிரும் சிக்கியுள்ளார். இப்படி பேசி பேசியே ஒரு விஷயத்தில் உள்ள நியாயத்தை வெளியில் கொண்டு வராமலேயே அனைவரையும் தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க முற்படுகிறார். மேலும் கரிகாலன் உடன் கண்டிப்பாக ஆதிராவிற்கு திருமணம் நடக்க வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்து வருகிறார் ஜான்சி ராணி.

Also Read: எதிர்நீச்சலின் 500-வது எபிசோட் இப்படித்தான் இருக்கும்.. கிளைமாக்ஸ் ரகசியத்தை போட்டு உடைத்து திருச்செல்வம்

ஆனால் குடும்பத்தில் நடக்கும் நிலைமையை வைத்து பார்த்தால் ஆதிராவின் திருமணம் நின்று விடும் என்று தோன்றுகிறது. அப்படி மட்டும் நடந்து விட்டால் குடும்பத்தையே நடுரோட்டிற்கு கொண்டு வந்து விடுவேன் என்று சவால் விட்டுள்ளார். மேலும் கொடுத்த வாக்கை காப்பாற்றாமல் விட்டால் குணசேகரனின் மானத்தையே வாங்க சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக்கிறார் ஜான்சி ராணி.

இந்நிலையில் குணசேகரன் ஆதிராவின் திருமண விஷயத்தில் மூக்கு உடைந்து  நிற்கப் போகிறார் என்று தெளிவாகத் தெரிகிறது. அதிலும் ஜான்சிராணி இடம் கொடுத்த வாக்கை நிறைவேற்றாததற்காக அவமானப்பட வேண்டும் என்று ரசிகர்களை எதிர்பார்த்து வருகின்றனர். இப்படி குணசேகரன் அடிமேல் அடிவாங்கி தனி மரமாக நிற்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர்.

Also Read: எதிர்நீச்சல் கதாபாத்திரங்கள் வாங்கும் சம்பளத்தின் மொத்த லிஸ்ட்.. ஒரு எபிசோடுக்கு இத்தனை லட்சம் பட்ஜெட்டா

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்