ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

குணசேகரனுக்கு எதிராக எதிர்நீச்சல் போட தயாராகும் ஜனனி.. ஏமாறப்போகும் ஜான்சிராணி

பரபரப்பான திருப்பங்களுடன் எதிர்நீச்சல் சீரியல் மக்கள் எதிர்பார்த்தப்படியே ஒளிபரப்பாகி வருகிறது. அதாவது 40% சொத்தை குணசேகரனுக்கு எழுதி கொடுத்த அப்பத்தா சுயநினைவு இன்றி மருத்துவமனையில் இருக்கிறார். இவரை தன் வசப்படுத்தி வைத்தால் மட்டுமே ரிஜிஸ்ட்ரேஷனில் எந்த பிரச்சனையும் இல்லாமல் 40% சொத்து உங்களிடம் வந்து சேரும் என்று ஆடிட்டர் கூறிய நிலையில் இவரை தேடி குணசேகரன் ஆஸ்பத்திரிக்கு வருகிறார்.

இதற்கிடையில் அப்பத்தாவை பார்க்க போன ஜனனி, அப்பத்தா கண்விழித்து ஜீவானந்தம் என்ற பெயரை மட்டும் சொல்லி மறுபடியும் அப்பத்தா கண் மூடிவிட்டார். ஒரு வேலை இவரிடம் ஏதாவது ஒரு சீக்ரெட் பிளானை சொல்லி வைத்திருப்பார். இவரை ஜனனி பார்த்தால் எல்லாத்துக்கும் தீர்வு கிடைக்கும் என்பதால் அப்பத்தா ஜனனிடம் அந்தப் பெயரை சொன்னது போல் தெரிகிறது. கண்டிப்பாக இது குணசேகரின் அந்த 40% சொத்துக்கு ஆப்பு வைக்கிற விதமாகவும் இருக்கலாம்.

Also read: ஜெயித்து விட்டோம் என்ற மமதையில் குணசேகரன்.. அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய அப்பத்தா

அடுத்ததாக குணசேகரனை பார்த்து பேசிய ஜான்சி ராணி, கரிகாலன் மற்றும் அவருடைய அப்பா, ஆதிரையின் நிச்சயதார்த்தத்தை பற்றி கேட்டதற்கு இது எல்லாமே ஒரு நாடகம் தான் ஆதிரைக்கும் கரிகாலனுக்கும் கல்யாணம் கண்டிப்பாக நடக்கும். ஆனால் அதற்கு உங்கள் சொத்தில் இருந்து பாதி சொத்தை கரிகலன் பெயரில் எழுதிக் வைக்க வேண்டும். அத்துடன் மெயின் ரோட்டில் இருக்கும் கல்யாண மண்டபத்தை கதிர் பெயருக்கு மாற்றிக் கொடுக்கணும். அதற்கு எவ்வளவு செலவாகுதோ அதை நான் தந்து விடுகிறேன்.

இதற்கு ஓகே என்றால் மேற்கொண்டு பேசலாம் என்று குணசேகரன், கரிகாலன் அப்பாவிடம் டீல் பேசுகிறார். அவரும் குணசேகரன் பேசியதெல்லாம் நம்பி சம்மதம் தெரிவித்து விட்டார். ஆக மொத்தத்தில் தொடர்ந்து லாபத்தை மட்டும் பார்த்து ஆதிரை கல்யாணத்தை நகர்த்திக் கொண்டு வருகிறார். அடுத்ததாக ஜனனிடம் அப்பத்தாவின் நிலைமையை பற்றி வீட்டில் போன் பண்ணி சொல்லலாம் என்று ஈஸ்வரி நந்தினி சொல்கிறார்.

Also read: நிச்சயதார்த்தமே வியாபாரமாக மாற்றிய குணசேகரன்.. அப்பத்தா எடுக்கப் போகும் முடிவு இதுதான்

அதற்கு ஜனனி ஆவேசமாக வந்த அரக்கனுக்கு சொல்லி ஒரு பிரயோஜனமும் இல்லை அவர் இங்க வரவும் கூடாது என்று கொந்தளித்து பேசுகிறார். பிறகு ஜனனியை சமாளித்து நந்தினி ரேணுகாவிற்கு ஃபோன் பண்ணி வீட்டிற்கு போனதும் அப்பத்தாவை பற்றி சொல்லிவிடுங்கள் என்று கூறுகிறார். அடுத்து ரேணுகாவும் வீட்டில் அனைவரிடமும் அப்பத்தாவை ஆஸ்பத்திரியில் சேர்த்து இருக்கிற விஷயத்தை சொல்கிறார். இதைக் கேட்ட குணசேகரன் மருத்துவமனைக்கு அப்பத்தாவை பார்க்க போகிறார்.

ஆனால் ஜனனி இவரை பார்த்து கோபப்பட்டு அப்பத்தாவை பார்க்க உங்களுக்கு எந்தவித தகுதியும் கிடையாது நீங்க ஏன் இங்கே வந்தீர்கள் என்று கேட்கிறார். இதற்கு குணசேகரன் நீ யாருமா இதை சொல்றதுக்கு நேத்து வந்தவ நீ. எனக்கு தான் அப்பத்தா மேல எல்லா உரிமையும் இருக்கு என்று பேசுகிறார். இதை கேட்ட ஜனனி மிகவும் கோபமாகி அப்பத்தா இந்த நிலைமைக்கு ஆனதற்கே நீங்கதான் காரணம். உங்களுடைய சுயநலத்துக்காக அப்பத்தாவை இங்கே கொண்டு வந்து சேர்த்து விட்டீங்க என்று சண்டை போடுகிறார்.

Also read: ராதிகாவை கல்யாணம் பண்ணது தப்பு என்று புலம்பும் கோபி.. மாமியாரின் டார்ச்சர்

- Advertisement -

Trending News