தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் ஜெயம் ரவி. இவரின் நடிப்பில் வெளியான தனி ஒருவன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தது.
அதைத் தொடர்ந்து அவர் பல திரைப் படங்களில் நடித்தாலும் அந்த படங்கள் எதுவும் ரசிகர்களை அவ்வளவாக கவரவில்லை. எப்படியாவது ஒரு வெற்றி திரைப்படத்தை கொடுத்துவிட வேண்டும் என்று அவர் தன் உடலை வருத்தி பல திரைப்படங்களில் நடித்தார்.
கடைசியாக இவரின் நடிப்பில் வெளியான பூமி திரைப்படத்தை ஜெயம் ரவி மிகவும் எதிர் பார்த்தார். ஆனால் அந்த திரைப்படமும் தோல்வியைத் தழுவி இவருக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. அதை தொடர்ந்து இவர் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் ஜெயம் ரவி, இயக்குனர் கல்யாண் கிருஷ்ணனுடன் ஒரு புதிய படத்தில் இணைய இருக்கிறார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே பூலோகம் என்ற திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் கூட்டணி அமைத்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இரவு நேரத்தில் எடுக்கப்பட இருந்தது.
தற்போது தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் இருப்பதால் ஜெயம் ரவி நடிக்க இருந்த அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த படங்கள் எல்லாம் தொடர்ந்து தோல்வியை தழுவியதால் அவர் மிகவும் விரக்தியில் இருந்துள்ளார்.
இதில் இந்த படமும் கொரோனாவால் தடை பட்டு போனதால் ஜெயம் ரவி மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறாராம். மேலும் அண்ணன் ராஜாவுடன் இணைந்து ஒரு படம் பண்ணலாம் என்றும் அவர் யோசித்து வருகிறார். ஆனால் அவரின் அண்ணனும் படங்களில் பிசியாக இருப்பதால் தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் அவர் பயங்கர அப்செட்டில் இருக்கிறார்.
இவருக்கு பின்னால் நடிக்க வந்த நடிகர்கள் எல்லாம் இப்போது எங்கேயோ போய் விட்ட நிலையில் இவர் மட்டும் சினிமாவில் இன்னும் ஒரு நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் தொடர்ந்து போராடி வருகிறார். அவருடைய அப்பாவும் எடிட்டர் மற்றும் தயாரிப்பாளர் அதனால் அவரிடமும் ஐடியா கேட்டு கொண்டே இருக்கிறாராம்.