Ethirneechal: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல், தற்போது விறுவிறுப்பாகவும் கதை எந்த மாதிரியாக அமையப் போகிறது என்று பரபரப்பும் சேர்ந்து வருகிறது.
அதாவது குணசேகரன் மற்றும் உமையாள் நினைத்தபடி சித்தார்த்துக்கும் தர்ஷினிக்கும் கல்யாணத்தை பண்ணி வைக்க வேண்டும் என்று கோவிலுக்கு தர்ஷினியை கூட்டிட்டு வந்திருக்கிறார்கள்.
ஆனால் சித்தார்த் மட்டும் இன்னும் வரவில்லை. உடனே உமையாள், ராமசாமிக்கு போன் பண்ணி ஏன் இன்னும் சித்தார்த் வரவில்லை. இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் இந்த கோவிலுக்கு கூட்டிட்டு வந்திருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்.
இதனால் ஜனனியை கடத்துட்டு போனவர்களை வைத்து சித்தார்த் எங்கே என்று கேட்டு துன்புறுத்துகிறார்கள். ஆனால் இது எதுவுமே தெரியாமல் ஜனனி வழக்கம்போல் திருட்டு முழி முழித்துக் கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் துப்பாக்கி சூட்டுடன் ஹீரோ மாதிரி என்டரி கொடுக்கப் போகிறார் ஜீவானந்தம்.
ஆக மொத்தத்தில் ஜீவானந்தம் வந்துவிட்டார், அதனால் தர்ஷினி விஷயத்தில் குணசேகரனின் உண்மையான முகத்திரை கூடிய சீக்கிரத்தில் வெளிவந்து விடும்.
இனி குணசேகரன் தப்பிக்க முடியாது
இதற்கிடையில் ஈஸ்வரி, தன்னுடைய மகளின் கனவை நிறைவேற்றும் விதமாக தர்ஷினியின் கோச்சிடம் உதவி கேட்கிறார். அவரும் பைனல் மேட்ச் இன்னும் நடக்கவில்லை தேதி தள்ளிப் போயிருக்கிறது.
அதனால் என்னால் முடிந்தவரை எல்லா உதவியும் நான் பண்ணுகிறேன் என்று கூறிவிட்டார். அந்த வகையில் தர்ஷினி கனவை நிறைவேற்றும் விதமாக ஈஸ்வரி முயற்சி எடுக்கப் போகிறார்.
இதையெல்லாம் தாண்டி குணசேகரனுக்கு மிகப்பெரிய தோல்வி பாடத்தை கற்றுக் கொடுக்க வேண்டும் என்று கதிர் கங்கணம் கட்டிக்கொண்டு ஸ்கெட்ச் போட்டு சித்தார்த்தை தூக்கி விட்டார். தூக்கியதோடு மட்டுமில்லாமல் இதை வைத்து வேறொரு பிளானையும் போட்டு வருகிறார்.
இதற்கு இடையில் கல்யாணம் பண்ண போகும் கோவிலுக்கு கரிகாலன் மற்றும் ஜான்சி ராணி போயிருக்கிறார்கள். அங்கே போய் குணசேகரனை தோற்கடிப்பதற்காக ஏதோ ஒரு வில்லங்கத்தை செய்யப் போகிறார்கள் என்று தெரிகிறது.
ஆக மொத்தத்தில் இந்த தடவை குணசேகரன் தப்பிக்கவே முடியாத அளவிற்கு ஒரு சிக்கலில் சிக்க போகிறார் என்பது தெரிய வருகிறது.