எதிர்நீச்சலில் தேவையில்லாத ஆணியை புடுங்க போகும் ஜீவானந்தம்.. படுத்த படுக்கையான குணசேகரனின் தம்பி

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலை ஆரம்பத்தில் பார்த்தது போல் சுவாரசியமாக இல்லை என்றாலும் இதை பார்த்த பின்பு தான் தூக்கமே வருகிறது என்பதற்கு ஏற்ப தான் நிலைமை இருக்கிறது. ஏனென்றால் கடந்த இரண்டு வருஷமாக பழகின ஒரு விஷயத்தை டக்குனு மறக்க முடியவில்லை.

அதனால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எப்படியாவது விறுவிறுப்பாக கதையை மாற்றி மக்களின் கவனத்தை பெற வேண்டும் என்று கதையில் பல ட்விஸ்ட்களை வைத்து நகர்ந்து வருகிறது. அந்த வகையில் கதிரின் மொத்த ஆட்டத்திற்கும் வேட்டு வைக்கும் விதமாக கௌதம் குறி வைத்து பிடித்து விட்டார்.

அத்துடன் இத்தனை நாளாக செய்த அட்டூழியத்துக்கு தண்டனையாக கௌதம் நல்ல வச்சு செய்கிறார். இதனால் இதோடு கதிரின் ஆட்டம் தற்போதைக்கு இல்லாமல் படுத்த படுக்கையாக இருக்கப் போகிறார். அடுத்ததாக தற்போதைய எபிசோடு படி குணசேகரன் கேரக்டர் பெருசாக சொல்லும் படியாக செட் ஆகவில்லை.

அந்த வகையில் இவருடைய கேரக்டர் இந்த நாடகத்திற்கு தேவையில்லாமல் தான் இருக்கிறது. அதனால் ஒரேடியாக இவருடைய கேரக்டருக்கு முடிவு கட்ட வேண்டும் என்று ஜீவானந்தம் பிளான் பண்ணி இருக்கிறார். அதனால் தன்னுடைய மனைவி கயல்விழி இறப்பிற்கு காரணமான குணசேகரனின் கதையை முடிக்கப் போகிறார்.

ஏற்கனவே சில விஷயங்களில் தயவு தாட்சண்யம் பார்க்காமல் தான் ஜீவானந்தம் பல காரியங்களை பண்ணியிருக்கிறார். அப்படிப்பட்டவருடைய மனைவியின் இறப்பிற்கு காரணமானவர்களை சும்மா விட்டு வைப்பாரா என்ன. அதனால் குணசேகரனின் ஆட்டத்திற்கு சரியான தண்டனை கொடுக்கப் போகிறார்.

இதனைத் தொடர்ந்து அப்பத்தாவும் அந்த 40% சொத்தை நல்ல காரியங்களுக்கு பயன்படுத்த போகிறார். ஆக மொத்தத்தில் குணசேகரனின் ஆட்டம் இதோடு குளோஸ். ஏற்கனவே கதிரின் கை காலை அடித்து ஒடுக்கி ஒரு ஓரத்தில் போட்டு விட்டார் கௌதம். அதனால் இனி மேல் அந்த வீட்டில் உள்ள பெண்களின் கை தான் ஓங்கி நிற்கப் போகிறது. வாடிவாசலை தாண்டி ஜெயிப்பதற்கு முன்னேற போகிறார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்