அய்யய்யோ விட்டுட்டோமே என புலம்பும் ரஜினி.. மொத்த பெயரையும் தட்டி சென்று ஹீரோ!

Actor Rajini: ரஜினி படம் என்றாலே அது ஃபுல் பேமிலி என்டர்டைன்மென்ட் படமாக தான் இருக்கும். அவ்வாறு தான் ஏற்கும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவர், தனக்கு கிடைத்த வாய்ப்பை தவற விட்டுட்டோம்னு பொறாமைப்பட்ட நிகழ்வை இத்தொகுப்பில் காணலாம்.

பி வாசு இயக்கத்தில் ரஜினி, பிரபு, வடிவேலு, நயன்தாரா, ஜோதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்த படம் தான் சந்திரமுகி. திகில் ஊட்டும் காமெடி நிறைந்த படமாய் மக்களின் பேராதரவைப் பெற்று தந்தது. மேலும் படத்தில் வேட்டையனின் கதாபாத்திரம் ஏற்று சிறப்புற நடித்திருப்பார் ரஜினி.

Also Read: குருதிப்புனல் படத்திற்காக சொந்தமாக தியேட்டர் வாங்கிய கமல்.. டெக்னாலஜி மூலம் பிரமிக்க வைத்த உலகநாயகன்

வசூல் ரீதியாகவும் கலெக்ஷன் பார்த்த இப்படம் பி வாசு ரஜினி கூட்டணியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதைத்தொடர்ந்து ரஜினி சந்திரமுகியில் வந்த வேட்டைக்காரன் கதாபாத்திரத்தை மேற்கொண்டு படமாக பண்ண வேண்டும் என ஆசைப்பட்டாராம்.

அவ்வாறு இருக்க பி வாசு, ரஜினியிடம் சந்திரமுகி 2 படத்திற்கான கதையை சொல்லும்பொழுது அவருக்கு விருப்பம் இல்லை என கூறிவிட்டாராம். அதைத்தொடர்ந்தே லாரன்ஸை இப்படத்தில் நடிக்க வைத்தாராம் பி வாசு.

Also Read: ரஜினி நடிக்க மறுத்த படத்தை நடித்துக் காட்டிய ரசிகன்.. உச்சகட்ட குதூகலத்தில் கும்மாளம் போடும் மொத்த டீம்

தற்போது வெளியாகி உள்ள சந்திரமுகி 2 வின் போஸ்டரை கண்டும் மற்றும் படம் குறித்த தகவலை அறிந்தும் இப்படம் பிரமாதமாக இருப்பதால், நான் தான் இப்படத்தை மிஸ் செய்து விட்டேனோ என தன் நண்பரிடம் வருத்தப்பட்டு பேசினாராம்.

அதிலும் குறிப்பாக இன்னும் படத்தை முழுமையாக ரஜினி பார்க்கவில்லையாம். மேலும் இம்மாதம் 4 தேதியில் இந்த படத்தை பார்க்க இருக்கிறாராம். படத்தை முழுமையாக பார்த்துவிட்டு, தான் ஏற்க இருந்த கதாபாத்திரத்தில் லாரன்ஸின்  நடிப்பை குறித்து என்ன சொல்ல போகிறார் என தெரியவில்லை என்று கூறி வருகிறார் பி வாசு.

Also Read: சக நடிகரை தற்கொலைக்குத் தூண்டிய வடிவேலு.. நாளுக்கு நாள் எகிறும் மாமன்னனின் க்ரைம் லிஸ்ட்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்