குருதிப்புனல் படத்திற்காக சொந்தமாக தியேட்டர் வாங்கிய கமல்.. டெக்னாலஜி மூலம் பிரமிக்க வைத்த உலகநாயகன்

Actor Kamalhassan: தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக அசுர வளர்ச்சி அடைந்து வருகிறார் கமல்ஹாசன். இவர் நடித்து வரும் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதையை அமைத்து, அதற்கு ஏற்ற மாதிரி தத்ரூபமாக நடிக்கக் கூடியவர். சரித்திரம் நின்னு பேசும் என்று சொல்வார்கள், அதே மாதிரி இவர் நடித்த படம் எத்தனை காலங்கள் ஆனாலும் அதை பற்றி பேசப்படும் விதமாக சரித்திர படமாக வருகிறது.

அத்துடன் தமிழ் சினிமாவில் கமலின் வளர்ச்சிதான் அதிக பங்காக இருக்கிறது. இவருடைய ஒவ்வொரு படத்திலும் பல புது முயற்சிகளைக் கொண்டு வருவதை பழக்கமாக வைத்திருப்பார். இவர் நடிக்கும் படமாக இருக்கட்டும், எடுக்கக்கூடிய படங்களும் சரி ரொம்பவே அட்வான்ஸ் ஆக தான் இருக்கும். அதனால் தான் காலம் கடந்தும் இவருடைய படத்தின் அருமை புரிகிறது.

Also read:  கமல்ஹாசன் மீது மாரி செல்வராஜுக்கு இருக்கும் வன்மம்.. தேவர்மகனை பழிவாங்க வரும் மாமன்னன்

அத்துடன் இவர் கற்றுக்காத விஷயங்களே இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு மேதையாக இருக்கக்கூடியவர். அப்படிப்பட்ட இவருடைய படங்களில் இவருக்கு அடையாளமாக இருக்கக்கூடிய படம்தான் குருதிப்புனல். இப்படத்திற்கு இவர்தான் கதை மற்றும் திரைக்கதை எழுதி இருக்கிறார். மேலும் இப்படத்தில் டால்பி என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருக்கிறார்.

டால்பி என்பது ஒரு புதிய ஒலி செயலாக்க தொழில்நுட்பக் கருவியாகும். அந்த காலத்தில் இந்த தொழில்நுட்பம் தமிழ்நாட்டில் கிடையாது. அதை முதன் முதலில் கொண்டுவந்த பெருமை கமல் அவரை சாரும். அதே மாதிரி இந்த ஒரு விஷயம் யாருக்குமே பெரிதாக தெரியவில்லை. இதை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக முயற்சி செய்தார்.

Also read: மயில்சாமியை பார்க்க வராத இளம் நடிகர்கள்.. அதிலும் கமல்ஹாசன் இப்படி இருப்பது மிகவும் வருத்தமானது

அந்த வகையில் இந்த டெக்னாலஜி எந்த திரையரங்கிலும் அப்போதைய காலங்களில் கிடையாது. இவருடைய குருதிப்புனல் படத்திற்காக, டால்பி தொழில்நுட்பத்தை திரையரங்குகளில் கொண்டுவர யாரும் முன் வரவில்லை. இதனால் சென்னையில் உள்ள தேவி தியேட்டரை கமல் சொந்த செலவில் நவீனமாக மாற்றி டால்பின் டெக்னாலஜி வைத்து கொடுத்தார்.

அதன் பின்னர் குருதிப்புனல் படம் வெளியாகி டால்பி சவுண்ட் சிஸ்டத்தை அனைவரும் அறிந்து பெரிய அளவில் பேசப்பட்டு வந்தார்கள். அதனாலேயே தற்போது வரை இந்த டால்பின் டெக்னாலஜி தமிழ் சினிமாவில் இருந்து வருகிறது. தான் கொண்டு வந்த புது விஷயத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க சொந்த பணத்தை கொடுத்து அனைவரையும் பிரமிக்க வைத்த பெருமை உலக நாயகனை சாரும்.

Also read: கடைசி காலத்தில் அழைத்து அள்ளிக் கொடுத்த எம்ஜிஆர்.. நெகிழ்ந்து போன கமல்

- Advertisement -