கட்டிக்காப்பற்றிய ராஜாவின் 7 வருட ரகசியம்.. உண்மையை போட்டுடைத்த ஜெயம் ரவி

சில நேரங்களில் சத்தமே இல்லாமல் சில படங்கள் வந்து மிகப்பெரிய வெற்றியடைந்து விடும். அப்படி வெளியாகி பிரமாண்ட வெற்றி அடைந்த ஒரு படம் தான் தனி ஒருவன். ஜெயம் ரவியின் அட்டகாசமான நடிப்பில் அவரது அண்ணன் ஜெயம் ராஜாவை தனி ஒருவன் ராஜா என கூறும் அளவிற்கு மாற்றிய பலமான திரைகதையோடு பக்காவான இயக்கத்தோடு வெளியான படம் தான் தனி ஒருவன்.

மேலும் இதில் அரவிந்த் சாமி கம்பேக் கொடுத்து வில்லனாக நடித்து மிரட்டி இருப்பார். யார் இந்த படத்தில் ஹீரோ என்று கேட்கும் அளவிற்கு ஜெயம் ரவியை விட அரவிந்த் சாமியின் கதாபாத்திரத்தை செதுக்கி இருப்பார் இயக்குனர் ராஜா. ஆரம்பக்காலகட்டத்தில் இயக்குனர் ராஜா தொடர்ந்து ஜெயம்,சந்தோஷ் சுப்ரமணியம் போன்ற ரீமேக் படங்களாக எடுத்து இவர் ரீமேக் இயக்குனர் என்று கிண்டலடிக்கப்பட்டார். அதன் பின் ராஜாவின் இயக்கத்தில் தனி ஒருவன் படம் வெளியானதற்கு பின் சென்சேசனல் இயக்குனராக மாறினார்.

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இந்த படத்தின் அடுத்த பாகம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமானது. பல இடங்களில் இது குறித்து இயக்குனர் ராஜாவிடம் கேட்கும் போது, தனி ஒருவன் படம் எப்படி மக்களை கவர்ந்து வெற்றி அடைந்ததோ அதே போல அதன் இரண்டாம் பாகம் வெற்றி அடைந்தால் மட்டுமே, அது மரியாதையாக இருக்கும்.அப்படி ஒரு திரைக்கதை அமைக்க எனக்கு கால அவகாசம் வேண்டும் என்று சொல்லி வந்தார்.

அதற்கிடையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வேலைக்காரன் படத்தில் தனி ஒருவன் டெம்ப்ளேட்டில் உணவுப்பொருட்களில் உள்ள கலப்படம் குறித்த சமூக கருத்தை அழுத்தமாக சொல்லி இருந்தார்.அந்த படமும் அவரின் திறமைக்கு மற்றும் ஒரு மகுடமாக அமைந்தது.அதன் பின்னும் தனி ஒருவன் 2 எப்போது வரும் என்றுதான் ரசிகர்கள் கேட்டு வந்தனர்.

அதனைப் பற்றிய முக்கிய தகவலை தற்போது அவரது தம்பியும் தமிழில் முன்னணி நடிகருமான ஜெயம் ரவி பகிர்ந்து இருக்கிறார். அதில் தனி ஒருவன் 2 ஆம் பாகத்திற்கான திரைக்கதையை ராஜா எழுதி முடித்து விட்டார். முந்தைய பாகத்தில் பார்த்ததை விட விறு விறுப்பான கதையாக வந்திருப்பதாகவும், முதல் பாகத்தில் எப்படி வில்லன் கதாப்பாத்திரம் பலமாக உருவாக்கப்பட்டு உள்ளதோ அதே போல இந்த பாகத்தில் ஒரு வெய்ட் ஆன வில்லன் கதாபாத்திரம் வருவதாகவும் கூறினார்.

ஜெயம் ரவி ஏற்கனவே இயக்குனர் மணி ரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்திலும், பூலோகம் பட இயக்குனரின் அகிலன் படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். இதோடு பல படங்கள் அவருக்கு வரிசையாக இருப்பதால் இந்த படம் இப்போதைக்கு தொடங்க வாய்ப்பு இல்லை என்றும் கூறினார். ஆனால் விரைவில் இதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என்றும் கூறினார். ஆக மீண்டும் ஜெயம் ரவி, தனி ஒருவன் ராஜா கூட்டணியில் ஒரு பிளாக்பஸ்டர் காத்திருக்கிறது.