வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

ஜவான் படத்தின் வெற்றியால் ஓவர் மிதப்பில் சுற்றி திரியும் அட்லீ.. அது சரி ஆசைப்படுவதெல்லாம் தப்பில்லையே?

Director Atlee: நேரம் காலம் கூடிவிட்டால் தன்னுடைய வெற்றியை யாராலயும் தடுக்க முடியாது என்பதற்கேற்ப தற்போது அட்லீயின் ஆட்டம் சூடு பிடித்திருக்கிறது. அதாவது எடுத்த படங்கள் கம்மியாக இருந்தாலும், ஷாருக்கானை வைத்து படம் எடுக்கும் அளவிற்கு அட்லீயின் லெவல் மாறிவிட்டது. அதோடு மட்டுமில்லாமல் ஜவான் படம் இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 1000 கோடி வசூலை நெருங்கி வருகிறது.

அந்த வகையில் இவர் அடுத்து எந்த ஹீரோவை வைத்து படம் எடுக்கப் போகிறார் என்ற பரபரப்பு இவர் மீது அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த அளவிற்கு கையில் சுக்கிர திசையுடன் வெற்றியை கெட்டியாக பிடித்துக் கொண்டு வருகிறார். அதனால் தான் என்னமோ தற்போது ஜவான் படத்தின் வெற்றியால் ஓவர் மிதப்பில் சுற்றிக்கொண்டு வருகிறார்.

Also read: லோகேஷுக்கு அட்லீய விட கம்மியா சம்பளம் கொடுத்து கரெக்ட் செய்த சன் பிக்சர்ஸ்.. காப்பி கதை செய்யும் ஸ்மார்ட் வொர்க்

அதாவது தற்போது கிடைத்திருக்கும் வெற்றியை வைத்து மிக மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார். அந்த வகையில் தற்போது அளித்த பேட்டியில் ஜவான் படத்தை எடுக்க கிட்டத்தட்ட நான்கு வருடம் கஷ்டப்பட்டு இருக்கிறேன். அதனால் தான் அதற்கான பலனை தற்போது வசூல் மூலமாக நான் அனுபவித்து வருகிறேன்.

இதோடு என்னுடைய ஆசை முடியவில்லை. பொதுவாக எல்லா இயக்குனர்களுக்கும் ஒரு கனவு இருக்கும். அதேபோலத்தான் எனக்கும் மிகப்பெரிய ஆசை இருக்கிறது. எப்படியாவது என்னுடைய படத்தின் மூலம் எனக்கு ஆஸ்கர் கிடைக்க வேண்டும். அத்துடன் கோல்டன் குளோப் அவார்டையும் நான் கைப்பற்ற வேண்டும். இதுதான் என்னுடைய ஆசை என்று ஓவர் நம்பிக்கையுடன் பேசி இருக்கிறார்.

Also read: அட்லீக்கு மட்டும் கிடைக்கும் மாலை, மரியாதை.. கண்டுகொள்ளாமல் கை கழுவி விடப்பட்ட அஜித் நண்பர்

இவர் ஆசைப்படுவது ஒன்றும் தப்பில்லை. இவரிடம் அந்த அளவிற்கு திறமை இருக்கிறது, வெற்றியை பார்க்க முடிகிறது என்றால் நிச்சயமாக ஆஸ்கார் விருதையும் வெல்ல முடியும். ஆனால் அதற்காக இவர் எடுத்த ஜவான் படம் ஆஸ்கார் வெல்லும் என்று அடித்துக் கூறுவது கொஞ்சம் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அதாவது அந்த படம் நல்லா தான் இருக்கு ஆனா ஆஸ்கார் வாங்கும் அளவிற்கு ஒன்றும் இல்லை என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். இவரை விட்டா இதற்கு முன்பு எடுத்த மெர்சல், பிகில் கூட ஆஸ்கார் கேட்பார் போல என்று இவரை கிண்டல் அடித்து வருகிறார்கள். அதாவது சந்தோஷத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் சில வார்த்தைகள் வெளிவரும். அது போல தான் தற்போது அட்லீயின் நடவடிக்கைகள் இருக்கிறது.

Also read: மாஸ் காம்போவில் உருவாகும் அட்லீயின் படம்.. தலையசைத்த 2 ஜாம்பவான்கள்

- Advertisement -

Trending News