Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரெண்டே நாளில் ஜெயிலர் படத்தை பின்னுக்கு தள்ளிய ஜவான்.. சுட்டு போட்டாலும் வெற்றியை தக்க வைக்கும் அட்லி

வெளியான ரெண்டே நாளில் ஜெயிலர் படத்தை பின்னுக்கு தள்ளி வெற்றி பெற்று வருகிறது ஜவான் படம்.

jailer-jawan

அட்லி முதல் முறையாக பாலிவுட்டில் காலடி வைத்து சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை எடுத்து முடித்திருக்கிறார். இப்படம் கடந்த 7ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. எந்த இடத்துக்கு போனாலும் நான் கிங் என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார் ஷாருக்கான்.

இப்படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் தீபிகா படுகோன் நடித்திருக்கிறார்கள். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி, சஞ்சய் தத், யோகி பாபு, பிரியாமணி போன்ற பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். பொதுவாகவே ஷாருக்கான் என்றாலே ரசிகர்கள் கிரஷ் ஆக இருப்பார்கள்.

Also read: யாரு சாமி நீ, ஜவான் இத்தனை படங்களின் காப்பியா.? ஷாருக்கான் தலையில் ரெட் சில்லியைஅரைத்த அட்லி

அந்த வகையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நடித்திருக்கும் ஷாருக்கான் படத்தை பார்ப்பதற்கு மிகுந்த எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் திரையரங்குகளில் போய் பார்த்துக் கொண்டு வருகிறார்கள். மேலும் இப்படம் பாலிவுட்டில் மிகப்பெரிய ஓபனிங் கொடுத்திருக்கிறது. முதல் நாள் மட்டுமே 129.6 கோடி வசூலை பெற்றதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு வெளியிட்டு இருக்கிறது.

அந்த வகையில் எப்படியும் உலகம் முழுவதும் 175 கோடி வசூலை எட்டி இருக்கும். இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாள் வசூலாக 107 கோடிக்கு மேல் உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் லாபம் கிடைத்திருக்கிறது. அதனால் கிட்டத்தட்ட இரண்டு நாள் வசூல் மட்டுமே 235 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது.

Also read: அட்லியை நம்பி இறங்கிய ஷாருக்கான் தல தப்பினாரா.? ஜவான் முதல் நாள் மொத்த வசூல் ரிப்போர்ட்

இதனைத் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிறு விடுமுறை என்பதால் கண்டிப்பாக ஒரு வாரத்திற்குள் 500 கோடி வசூலை உலகம் முழுவதும் பார்த்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மொத்த படக்குழுவும் சந்தோஷத்தில் திக்குமுக்காடி வருகிறார்கள். அத்துடன் ஷாருக்கானின் ரசிகர்களும் அவர்களுடைய சந்தோசத்தை கொண்டாடி வருகிறார்கள்.

இதற்கிடையில் தனிக்காட்டு ராஜாவாக ரஜினியின் ஜெயிலர் படம் கிட்டத்தட்ட 30 நாட்களில் திரையரங்குகளை அலங்கரித்து வந்தது. தற்போது ஜவான் படத்தின் வசூலை பார்க்கும் பொழுது ஜெயிலர் படத்தை ரெண்டே நாளில் ஓவர் டேக் செய்து விட்டதாக கூறப்படுகிறது. என்னதான் இயக்குனர் அட்லி காப்பி கதையே வைத்து உருட்டி வந்தாலும் கடைசியில் லாபத்தை ஜெட் வேகத்தில் பார்த்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also read: ஜெயிலர் ஒரு புறம் இருக்க சின்னத்திரையிலும் பட்டையை கிளப்பும் ரஜினி.. பிசிறு தட்டாமல் கல்லாவை ரொப்பும் சேனல்கள்

Continue Reading
To Top