குணசேகரனை தோற்கடிக்க ஜனனி பண்ணும் சதி.. ஈஸ்வரி கதிருக்கு கொடுக்கும் பதிலடி

சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் தற்போது பார்ப்பவர்களின் கவனத்தை திசை திருப்புற மாதிரி திருப்பங்கள் வருகிறது. அதாவது இந்த நாடகத்தின் முக்கிய கருத்து அடிமையாக இருக்கும் அந்த வீட்டின் மருமகள், தில்லாலங்கடி வேலைக்கு மொத்த உருவமாக இருக்கும் குணசேகரனை எதிர்த்து எப்படி போராட போகிறார்கள் என்பதை பார்க்கவே ஆவலாக ஒவ்வொரு நாளும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அதற்காக இப்படி நீண்ட மாதமாக ஆதிரை அருணின் திருமணத்தை ஜவ்வு மாதிரி இழுத்துக் கொண்டே போவது பார்க்கவே கடுப்பாக இருக்கிறது. ஒரு ரெண்டு எபிசோடு நல்லா இருந்தா நாலு நாள் மொக்கையா கொண்டு போயிட்டு இருக்காங்க. இன்னும் விறுவிறுப்பாக வேற கதைகளுடன் சீரியல் இருந்தால் பார்க்கிற மக்களுக்கு ஒரு ஆர்வமாக இருக்கும்.

Also read: உயிரைக் காப்பாற்றும் ராதிகா.. உருட்டுறதுக்கு கதையில்லாமல் சன் டிவியை பாலோ செய்யும் விஜய் டிவி

வருகிற எபிசோட் படி குணசேகரனுக்கு எதிராக ஜனனி, ஆதிரை அருண் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்று பிளான் போட்டிருக்கிறார். அடுத்ததாக ஜனனி, ரேணுகா மற்றும் நந்தினி இவர்கள் அனைவரும் சேர்ந்து அருணை பார்த்து பேசும் பொழுது திடீரென்று அங்கு அரசு வந்து இவர்களை தொடர்ந்து பேசவிடாமல் நீங்கள் இனிமேல் என்ன பண்ணாலும் இந்த கல்யாணம் மட்டும் நடக்காது. மறுபடியும் இந்த மாதிரி பேசுற வேலை எல்லாம் வச்சிக்காதீங்க என்று கூறிவிட்டார்.

அடுத்ததாக குணசேகரன் சம்மந்திகளை கூப்பிட்டு விருந்து உபசரிப்பு கொடுத்து கல்யாணம் வரை நீங்கள் ஒரே வீட்டில் தான் இருக்கணும். நீங்கள்தான் இந்த கல்யாணத்தை முன்னாடி இருந்து பண்ணி வைக்கணும் என்று நைசாக பேசி கூப்பிட்டு இருக்கிறார். அவங்களும் இருந்த மாண ரோசதெல்லாம் விட்டுட்டு குணசேகரன் கூப்பிட்ட உடனே பழசெல்லாம் மறந்துட்டு வந்துட்டாங்க.

Also read: ஐஸ்வர்யா ஓவர் ஆட்டத்தால் வந்த விளைவு.. இறுதி கட்டத்தை நோக்கி பரபரப்பாக நகரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

இவர்களை வீட்டில் பார்த்த ரேணுகா நந்தினி என்ன நடக்குது என்று தெரியாமல் குழப்பத்தில் நீங்களா ஏன் இங்க வந்தீங்க எவ்வளவு பட்டாலும் திருந்தவே மாட்டீங்களா என்று கேட்கிறார். உடனே கதிர் இனிமேல் அவர்கள் எல்லாரும் கல்யாணம் முடியும் வரை இங்குதான் எங்களுக்கு ஒத்தாசையாக இருக்கப் போறாங்க என்று சொல்லிவிட்டார். இவர்களை வச்சு தான் குணசேகரன் ஏதோ டகாட்டி வேலையே பண்ண போறாருன்னு தெரியுது.

அடுத்ததாக அப்பத்தா சுயநினைவு இல்லாத போதே ரிஜிஸ்டர் பண்ணி சரியான முறையில் 40% முழுமையாக அடைந்து விடனும் என்று குணசேகரன் அடுத்த பிளானை செய்கிறார். இதற்கிடையில் அப்பத்தாவை பார்க்க போன ஜனனிடம் கதிர் உனக்கு எந்த உரிமையும் இல்லை நீ போகக்கூடாது என்று சொல்ல அதற்கு ஈஸ்வரி அவை என்னுடைய தங்கை அந்த உரிமையில் இங்கே இருக்கலாம் என்று கதிருக்கு பதிலடி கொடுக்கிறார். கதிர் ரொம்பவே ஓவராக தான் துள்ளிக்கிட்டு வருகிறான். எதுவாக இருந்தாலும் சீக்கிரமா ஒரு முடிவுக்கு வாங்க என்று எதிர்நீச்சல் பார்ப்பவர்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

Also read: குணசேகரனின் வீழ்ச்சி ஆரம்பம்.. ஜனனி, அரசு செய்ய போகும் தரமான சம்பவம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்