ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

உருப்படியான விஷயம் செய்யும் ஜனனி.. குணசேகரனின் கனவு கோட்டை 40% ஷேர் க்ளோஸ்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் தற்போது அப்பத்தா சொன்ன ஜீவானந்தம் யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஜனனி இறங்கி விட்டார். அதாவது அப்பத்தா கண்விழித்து ஜனனிடம் ஜீவானந்தத்தை கண்டுபிடிப்பதற்காக நிச்சயதார்த்த மண்டபத்தை சொல்கிறார். இதை புரிந்து கொண்ட ஜனனி மறுநாள் அங்கே போவதற்கு சக்தியுடன் தயாராக இருக்கிறார்.

இதற்கிடையில் குணசேகரன் வழக்கமாக போடும் வட்டம் மேஜை மாநாட்டில் சக்தியிடம் பேசுவதற்கு கீழே வர சொல்கிறார். பிறகு சக்தியும் ஜனனியும் கீழே வந்தவுடன் கதிர் எப்பொழுதும் போல் வானத்துக்கும் பூமிக்கும் குதித்து சண்டை போடுகிறார். ஆனாலும் சக்தி ஏன் அமைதியாகவே இருந்து வேடிக்கை பார்க்கிறார் என்று தெரியவில்லை.

Also read: கோபியை தண்ணி தெளித்து விட்ட பாக்கியா.. ஒட்டுமொத்த குடும்பத்தின் நிம்மதியைக் கெடுக்கும் ராதிகா

இவரும் ஞானத்துக்கு அடுத்து அந்த வீட்டில் டம்மி பீஸ் ஆகத்தான் இருக்கிறார். அதனால் தான் அல்லக்கை கதிர் ரொம்பவே ஓவராக துள்ளுகிறார். ஆனாலும் எப்போதும் குணசேகரனுக்கு கதிரை ஏத்திவிட்டு மற்றவர்களை சீண்டிப் பார்ப்பதே வேலையாக போய்விட்டது. அடுத்ததாக சக்தியை மிரட்டும் விதமாக இந்த கல்யாணத்தில் யார் மூலமாக பிரச்சனை வந்தால் என்னுடைய உண்மையான சுய ரூபத்தை பார்க்க வேண்டியது வரும் பார்த்து நடந்து கொள்ளுங்கள் என்று எச்சரிக்கிறார்.

இந்த பிரச்சனைக்கு நடுவில் குணசேகரனை பார்ப்பதற்கு ஆடிட்டர் வீட்டிற்கு வருகிறார். பிறகு எல்லா பேப்பரும் ரெடியா என்று குணசேகரன் கேட்க அவரும் தயாராக இருக்கிறது என்று சொல்கிறார். அடுத்ததாக ஜனனி சக்தியை வெளியே அனுப்பி ஒவ்வொருவரையும் கழட்டி விடுகிறார். இதை பார்த்த பிறகு ஜனனிக்கு ஏதோ ஒரு சந்தேகம் ஏற்படுகிறது.

Also read: பாசமலையை பொழியும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணன் தம்பிகள்.. இதையும் வீடியோ எடுத்துப் போடும் ஐஸ்வர்யா

அதனால் ஜனனி மறுபடியும் வீட்டிற்குள் வந்து ஏற்கனவே வாங்கி வைத்திருந்த சிசிடிவி கேமராவை அப்பத்தாவின் அருகில் வைக்கப் போகிறார். அப்பொழுது இங்கு என்ன சதி நடக்கும் என்று தெரிந்து கொள்வதற்காக ஜனனியின் முயற்சி. கண்டிப்பாக இது குணசேகரனுக்கு மிகப்பெரிய ஆப்பாக தான் இருக்கும். ஏனென்றால் சுயநினைவு இல்லாத போது போட்ட கையெழுத்து செல்லாது.

இது ஒரு பக்கம் இருந்தாலும் அப்பத்தா சொன்ன அந்த ஜீவானந்தத்தை கூடிய விரைவில் ஜனனி கண்டுபிடித்து விட்டால் அதுவே எல்லா பிரச்சனைக்கும் ஒரு தீர்வாக அமைந்துவிடும். இப்பொழுது தான் ஜீவானந்தத்தை கண்டுபிடிப்பதற்கு ஜனனி முயற்சி செய்யப் போகிறார். இந்த உருப்படியான ஒரு விஷயத்தால் குணசேகரின் கனவு கோட்டையாக இருக்கும் 40% ஷேர் அவருக்கு கிடைக்காமல் போகப் போகிறது.

Also read: கதிரை மட்டம் தட்டிய குணசேகரன்.. எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றிய நந்தினி

- Advertisement -

Trending News