ஜனனி முட்டா பீஸ், குணசேகரன் முரட்டு பீசு.. இரண்டையும் வைத்து மட்டமாக உருட்டும் எதிர்நீச்சல் ஜீவானந்தம்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில், குணசேகரன் தர்ஷினிடம் யாராவது ஒருவர் பேசிவிட்டால் அனைத்து உண்மையும் தெரிந்து விடும் என்பதற்காக யாரையும் கிட்ட நெருங்க விடுவதில்லை.

அதே நேரத்தில் தர்ஷினி, அப்பா அப்பான்னு புலம்பியதால் ஜர்ஜும், தர்ஷினிக்கு பழைய ஞாபகம் வரும் வரை குணசேகரன் கஸ்டடியில் தான் இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார். சும்மாவே குணசேகரன் மூர்க்கத்தனமாக ஓவரா குதிப்பார்.

இதுல அவருக்கு சாதகமாக வேற, ஒரு விஷயம் நடந்து விட்டது. இனி அதற்கு ஏற்ற மாதிரி ஒவ்வொரு காயாக பிளான் பண்ணி நகர்த்தப் போகிறார். இதுல வேற குணசேகரனின் அம்மா, பைத்தியக்காரி மாதிரி என்ன நடக்குது என்று தெரியாமல் இஷ்டத்துக்கு ஒவ்வொன்றையும் பண்ணி தர்ஷினியை இன்னும் அதிகமாக வேதனைப்படுத்துகிறார்.

மட்டமாக கதையை உருட்டும் ஜீவானந்தம்

இதையெல்லாம் தாண்டி ஈஸ்வரிக்கு ஜாமீன் கிடைத்து மகளை பார்ப்பதற்கு வீட்டிற்கு வருகிறார். வந்த பிறகு குணசேகரன் வழக்கம்போல் அரக்கன் குணத்தை காட்டுகிறார். இந்த மாதிரி ஓவரா கொதிக்கிறதுக்கு ஈஸ்வரி அப்படியே குணசேகரன் கன்னத்தில் பளார்னு ஓங்கி ஒரு அரை விட்டிருந்தா கொஞ்சமாவது மனதிற்கு ஒரு திருப்தியாக அமைந்திருக்கும்.

அதை விட்டுட்டு மறுபடியும் புருசனிடம் கெஞ்சிகிட்டு இருக்காங்க. இதற்கிடையில் ஜனனி, ஈஸ்வரிடம் தர்ஷினி ஏன் எப்ப பார்த்தாலும் அப்பா அப்பான்னு சொல்லிக்கிட்டே இருக்கா என்று கேட்கிறார். அதற்கு ஈஸ்வரி, என் பொண்ணு அப்பான்னு கூப்பிடறது ஜீவானந்தத்தை தான் என்று சொல்கிறார். இதை கேட்டதும் அங்கு இருப்பவர்கள் அதிர்ச்சி ஆகிறார்கள்.

ஆனால் இந்த ஒரு விஷயம் போலீஸ் கண்ணுக்கு அல்லது மற்றவர்களுக்கு தெரிந்தும் ஒரு பிரயோஜனமும் இல்லை. இதற்கெல்லாம் ஒரே வழி தர்ஷினி வாயை திறந்து நடந்த அனைத்தையும் சொன்னால் மட்டும் தான் குணசேகரின் வண்டவாளம் தண்டவாளம் ஏறும்.

அதுவரை குணசேகரன் போடும் டிராமாவை சகித்து தான் ஆக வேண்டும். ஜனனி ஓவராக டயலாக் பேசி வாய் சவடால் விடுவதற்கு மட்டும்தான் லாய்க்கு என்று ஒவ்வொரு விஷயத்திலும் சரியா நிரூபித்துக் காட்டி வருகிறார். அந்த வகையில் சரியான முட்டாள் பீஸ் என்று சொல்லும் அளவிற்கு தான் இருக்கிறார்.

இன்னொன்று மூர்க்கத்தனமாகவும், அரக்கனாகவும் முரட்டுத்தனமாக எல்லா விஷயத்திலும் ஜெயித்து வருகிறார் குணசேகரன். இப்படிப்பட்ட இந்த இரண்டு பேரின் கதையை வைத்து மட்டமாக சீரியல் உருட்டப்பட்டு வருகிறார் ஜீவானந்தம்.

தயவுசெய்து இந்த நாடகத்துக்கு ஒரு எண்டு கார்டு போட்டு விடுங்கள் என்று நாடகத்தை பார்ப்பவர்கள் கமெண்ட்ஸ் மூலம் ஆதங்கத்தை தெரிவித்து வருகிறார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்