ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

அப்பத்தாவை பற்றி அதிர்ச்சி தகவலை சொன்ன போலீஸ்.. கதறி அழும் ஜனனி

Ethirneechal Serial Promo: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அப்பத்தா சொத்து யாருக்கு என்று சொன்னதிலிருந்து பரபரப்பு பற்றி கொண்டது. ஒரு பக்கம் குணசேகரன் எப்படியாவது தீர்த்து கட்டி விட வேண்டும் என திட்டம் தீட்டிக் கொண்டிருக்க, மறுப்பக்கம் ஜீவானந்தம் அப்பத்தாவை காப்பாற்ற வேண்டும் என போராடிக் கொண்டிருக்கிறார்.

திருவிழா முடிந்து வீட்டிற்கு வந்த குணசேகரன் அப்பத்தாவுக்கு பாலில் எதையோ கலந்து கொடுத்து விட்டார். மயக்கம் போட்ட அப்பத்தாவை தம்பிகளுடன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் ஜனனி அப்பத்தாவை எந்த ஆஸ்பத்திரியிலும் சேர்க்கவில்லை என்பதை கண்டுபிடித்து, சக்தியிடம் சொல்லி ஞானத்திற்கு போன் செய்ய சொன்னார்.

ஞானம் அதற்கு எல்லோரும் வீட்டுக்கு வாருங்கள் என்று சொல்லி ஃபோனை வைக்கிறார். வீட்டிற்கு வந்து பார்த்தால் யாருமே இல்லை. ஞானம், கதிர் ஈரத்துணி உடன் நெற்றியில் விபூதி பூசி கொண்டு வருகிறார்கள். நந்தினி, ரேணுகா, ஈஸ்வரி, ஜனனி எல்லோரும் அப்பத்தா எங்கே என்று கேட்க, ஞானம் அழுது கொண்டே அப்பத்தா நம்மை விட்டு போய்விட்டார் என்று சொல்கிறார்.

Also Read:பிரதீப் சோலிய முடிச்சாச்சு, அடுத்த பாயாசம் யாருக்கு.? வேட்டைக்கு தயாராகும் மாயா அண்ட் கோ

அப்பத்தாவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் காரை நோக்கி சிலர் துப்பாக்கிச் சூடு நடத்துகிறார்கள். யார் என்று காரை விட்டு எல்லோரும் இறங்கி நின்று பார்க்கும் போது அப்பத்தா இருக்கும் கார் குண்டு வெடித்து சிதறுகிறது. காரில் இருந்து கிடைத்த சின்ன சின்ன பாகங்களையும், சாம்பலையும் எடுத்துக்கொண்டு கங்கையில் கரைப்பதற்காக குணசேகரன் சென்றிருப்பதாக ஞானம் சொல்கிறார்.

மேலும், ஜீவானந்தம் சொத்துக்காக தான் அப்பத்தாவை கொன்றுவிட்டதாக கதிர் சொல்கிறார். ஈஸ்வரியை ரொம்பவும் தரைகுறைவாக பேசுகிறார். இதனால் ஜனனி கதிரை அடிக்கப் போகிறா.ர் ஜனனி மற்றும் சக்தி இருவரும் சேர்ந்து போலீஸ் ஸ்டேஷன் சென்று அப்பத்தா இருந்த கார் வெடித்த சம்பவம் பற்றி விசாரிக்கிறார்கள்.

மேலும் அந்த இடம் எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். கார் வெடித்த இடத்திற்கு இருவரும் சென்று பார்க்கிறார்கள். அப்போது ஜனனி கதறி அழுகிறார். வீட்டில் இருந்து கொண்டேன் நந்தினி மற்றும் ரேணுகாவும் அப்பத்தாவை நினைத்து அழுகிறார்கள். அதே நேரத்தில் ஈஸ்வரி ஜீவானந்தத்தை நேரில் சந்திப்பதற்காக கூறப்படுகிறார்.

ஈஸ்வரி பர்ஹானாவை சந்தித்து ஜீவானந்தம் எங்கே இருக்கிறார் என்று கேட்கிறார். அப்போது ஜீவானந்தம் ஈஸ்வரிக்கு போன் செய்து ஒரு லொகேஷன் அனுப்பி அங்கே வர சொல்கிறார். ஒரு பக்கம் ஜனனி அப்பத்தா இறந்த இடத்தில் தடயத்தை கண்டுபிடிக்க சென்றிருக்க, மறுபக்கம் உண்மையை அறிய ஈஸ்வரி ஜீவானந்தத்தை தேடி செல்வது போல் இன்றைய ப்ரோமோ முடிந்து இருக்கிறது.

Also Read:வா வா ப்ரோமோ பொறுக்கி.. யாரு பெருசுன்னு அடிச்சு காட்டு, பத்த வச்சு குளிர் காயும் பிக்பாஸ்

- Advertisement -

Trending News