அப்பவே லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்த முத்துவேல் பாண்டியன் மனைவி.. ரகசியம் அம்பலமானதால் நடந்த திருமணம்

Ramya Krishnan: 90ஸ் காலகட்டத்தில் இருந்த ஹீரோயின்களில் இன்று வரை அதே இளமையுடன் இருப்பவர்தான் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் எத்தனை படங்கள் நடித்திருந்தாலும், ரஜினிகாந்தின் படையப்பா படத்தில் நடித்த நீலாம்பரி கேரக்டர் மூலம் தான் பிரபலமானார். தற்போது கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழித்து ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் மூலம் மீண்டும் ட்ரெண்டாகி இருக்கிறார்.

ஜெயிலர் படத்திற்குப் பிறகு இவர் ட்ரெண்டானது மட்டுமல்லாமல், இவருடைய காதல் கதையும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரம்யா கிருஷ்ணன் தொண்ணூறுகளின் காலகட்டத்திலேயே தனக்கு பிடித்த ஒருவருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறார். அந்த காலத்தில் இவருக்கு இப்படி ஒரு தைரியமா என இப்போது பேசப்படுகிறது.

Also Read:எப்போதுமே இந்த 7 பேருக்காக திறந்தே இருக்கும் ரஜினி வீட்டின் கதவு.. மானசீக குருவாக ஏற்றுக் கொண்ட விஜய்யின் அப்பா

நடிகை ரம்யா கிருஷ்ணன் கடந்த 2003 ஆம் ஆண்டு கிருஷ்ண வம்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் தெலுங்கு பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடன இயக்குனர் ஆவார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கிறார். இவர் தற்போது ரங்கமார்தாண்டா என்னும் படத்தில் பணியாற்றி வருகிறார்.

1998 ஆம் ஆண்டு சந்திரலேகா என்னும் படத்தில் ரம்யா கிருஷ்ணன், இயக்குனர் கிருஷ்ண வம்சி இயக்கத்தில் நடித்திருக்கிறார். அப்போது இவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்திருக்கிறது. வீட்டில் யாருக்கும் தெரியாமல் இருவரும் காதலித்து வந்திருக்கிறார்கள். அதே நேரத்தில் சினிமாவிலும் அவரவர் விருப்பப்படி பணியாற்றி வந்திருக்கிறார்கள்.

Also Read:சொப்பனத்துல கூட யோசிக்கல சாரே, முதல் முறையாக முகத்தை காட்டிய வர்மன்.. ரஜினியால் வெளியில தல காட்ட முடியல

ஒரு கட்டத்தில், இவர்கள் இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகமாகி, அந்த காலகட்டத்திலேயே லிவ்விங் ரிலேஷன்ஷிப் முறையில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இதை வெளியில் தெரியாமல் பார்த்துக் கொண்டாலும், எப்படியோ ரம்யா கிருஷ்ணன் வீட்டுக்கு தெரிந்து விட, இரு வீட்டாரும் சேர்ந்து முடிவு எடுத்து ஆறு வருட காதலை திருமணத்தில் முடித்து வைத்திருக்கிறார்கள்.

திருமணமாகி கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாகியும், நடிகை ரம்யா கிருஷ்ணன் சினிமாவில் தனக்கு பிடித்த கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். பாகுபலி போன்ற படமாக இருந்தாலும் சரி, சூப்பர் டீலக்ஸ் போன்ற படமாக இருந்தாலும் சரி எப்படிப்பட்ட கேரக்டரிலும் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவருடைய நடிப்பில் குயின் வெப் சீரிஸும் குறிப்பிடத்தக்கது.

Also Read:ரஜினி மனதில் இருந்த தமன்னாவை தூக்கி எறிய செய்த கலாநிதி.. ஷூட்டிங்கில் ஒயிட் பியூட்டி செய்த மட்டமான வேலை

- Advertisement -