காதலியை கழட்டி விட்ட ஜெய்.. கமுக்கமாக நடக்கும் திருமண ஏற்பாடு

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிப்புக்கு திரும்பி இருக்கும் ஜெய் பற்றி சமீப காலமாக ஏகப்பட்ட செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே இவர் மீது ஏகப்பட்ட சர்ச்சைகள் வெளிவந்தது இந்நிலையில் இவருக்கும் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்திருக்கும் நடிகைக்கும் காதல் என்றெல்லாம் கிசுகிசுக்கள் வெளிவந்தது.

டிவி சீரியல் மூலம் பிரபலமான நடிகை வாணி போஜன் தற்போது சினிமாவில் ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் ஜெய்யுடன் இணைந்து நடிக்கும் போது காதல் வயப்பட்டதாகவும், தற்போது அவர்கள் இருவரும் ஒன்றாக ரகசிய குடித்தனம் நடத்தி வருவதாகவும் செய்திகள் சமீப காலமாக உலா வந்து கொண்டிருக்கிறது.

Also read : ஒரு சூப்பர் ஹிட் படத்தோட காணாமல் போன இயக்குனர்.. எல்லாம் ஜெய் ராசி தான் போல

இது மிகப்பெரிய பரப்பரப்பை கிளப்பிய நிலையில் வாணி போஜன் மறைமுகமாக ஒரு ட்வீட் போட்டு இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆனால் ஜெய் இதுபற்றி எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாகவே இருந்தார். இந்நிலையில் அவருக்கு திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து கொண்டிருக்கிறது.

இசையமைப்பாளர் தேவா ஜெய்யின் பெரியப்பா என்பது அனைவருக்கும் தெரியும். அவர்தான் தற்போது திருமண ஏற்பாடுகளை முன் நின்று கவனித்து வருகிறாராம். அடுத்தடுத்து ஜெய் பற்றி வெளிவந்த செய்திகள் தான் இந்த அவசர திருமண ஏற்பாட்டிற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

Also read : ட்ரான்ஸ்பரண்ட் உடையில் பளிச்சுனு வந்த வாணி போஜன்.. செம வைரல் புகைப்படம்

வீட்டில் உள்ளவர்களின் வற்புறுத்தல் தாங்க முடியாமல் ஜெய்யும் தற்போது திருமணத்திற்கு பச்சைக்கொடி காட்டி இருக்கிறார். அதனால் இப்போது அவருடைய வீட்டில் திருமண கொண்டாட்டம் களை கட்டிக் கொண்டிருக்கிறது. விரைவில் திருமணம் நடக்க இருக்கும் ஜெய் இந்த விஷயத்தை தன் சென்னை 28 நண்பர்களுக்கு தெரிவித்து பார்ட்டியும் கொண்டாடி இருக்கிறார்.

இந்த விஷயம் தான் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு செய்தியாக பேசப்பட்டு வருகிறது. மேலும் ஜெய் தன் வீட்டில் உள்ளவர்களின் வற்புறுத்தலால் தற்போது தன்னுடைய டெம்பரரி காதலியை கழட்டி விட்டதாகவும் கிசுகிசுத்து வருகின்றனர். எது எப்படியோ பல வருடங்களாக சிங்கிளாக சுற்றிக் கொண்டிருந்த ஜெய் தற்போது திருமண பந்தத்தில் இணைய உள்ளார் என்று பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Also read : வாணி போஜனை சினிமாவை விட்டு ஒதுங்கிய நடிகர்கள்.. தற்போது நடிக்கச் சொல்லி கெஞ்சும் பிரபலங்கள்

Next Story

- Advertisement -