ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

தோள்பட்டையில் பலத்த காயம்.. பொருட்படுத்தாமல் நடித்துக் முடித்த பிரபலம், பாராட்டித் தள்ளிய படக்குழு

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான பகவதி படத்தில் அவருக்கு சகோதரராக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஜெய். பின்னர் 2007 ஆம் ஆண்டு வெளியான சென்னை 28 படம் மூலம் பிரபலமானார்.

தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான சுப்பிரமணியபுரம், வாமனன், கனிமொழி, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி போன்ற படங்கள் வெற்றி பெற்றன. தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகராக வலம் வரும் ஜெய், நடிப்பை தாண்டி தனது தொழிலில் காட்டும் அர்ப்பணிப்பும், உழைப்பும் அனைவருக்கும் அவரை மிகவும் பிடித்தமான நபராக மாற்றியுள்ளது.

நடிகர் ஜெய் தற்போது இயக்குனர் சுந்தர்.சி தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இயக்குனர் பத்ரி இயக்கி வரும் இப்படத்தின் சண்டைக் காட்சிகளுக்கான படப்பிடிப்பு சமீபத்தில் நடந்துள்ளது.

அந்த காட்சிகள், மிகவும் ஆபத்தானது என்பதால், பலத்த முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு படமாக்கி உள்ளனர். அதில் ஜெய் ஒரு மேஜையை உடைக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.

அப்போது, எதிர்பாராதவிதமாக, நடிகர் ஜெய்யின் தோள்பட்டை இடம் பெயர்ந்தது. அவரைப் பரிசோதித்த பிசியோ தெரபி குழு, அவரை ஓய்வெடுக்க சொன்னபோதும், அதை பொருட்படுத்தாமல், மீதியுள்ள ஆபத்தான காட்சிகளையும் நடித்து கொடுத்துள்ளார்.

jai-cinemapettai
jai-cinemapettai

இந்த தேதிகளை தவறவிட்டால், படக்குழு மீண்டும் இந்த இடத்தில் படபிடிப்பு நடத்துவதற்கான அனுமதியை பெற முடியாது என்பதற்காக, ஜெய் இவ்வாறு செய்துள்ளார். படக்குழுவினரின் நலனுக்காக ரிஸ்க் எடுத்து தனது காட்சிகளை நடித்துக் கொடுத்த ஜெய்யின் அர்பணிப்பை மொத்த படக்குழுவும் பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

Trending News