கதிரும் தனமும் திருந்தவே மாட்டாங்க போல.. கண்ணன் ஐஸ்வர்யா உருப்பட வாய்ப்பே இல்லை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது இறுதி கட்டத்தை நோக்கி வருகிறது. அதாவது சமீபத்தில் வந்த எபிசோடுகளில் ஐஸ்வர்யா பேராசையால் கடனுக்கு மேல் கடன் வாங்கி நடுத்தெருவில் நிற்கும்படி கண்ணனை மாட்டிவிட்டு விட்டார். ஆனால் இவர் செய்த தவறுக்கு கடைசியில் கதிர் போலீஸிடம் மாட்டிக் கொண்ட தான் மிச்சம்.

பிறகு இது தெரிந்த மூர்த்தி மற்றும் ஜீவா கதிரை வெளியே கொண்டு வந்து விடுகிறார்கள். அடுத்து கதிர், கண்ணன் வீட்டிற்கு சென்று கொஞ்சம் அட்வைஸ் பண்ணி இனி தனியாக இருந்து கஷ்டப்பட வேண்டாம். நாம் எல்லோரும் ஒரே வீட்டில் இருக்கலாம் என்று சொல்கிறார். இதை கேட்டதும் கண்ணன் இதுதான் சரியான முடிவு என்று ஐஸ்வர்யாவை கூட்டிக்கிட்டு மூர்த்தி வீட்டுக்கு வந்து விடுகிறார்.

Also read: பழனிச்சாமியை தேடி வீட்டிற்கு போகும் கோபியின் குடும்பம்.. திருமணத்துக்கு பொறுப்பேற்கும் பாக்கியா

ஒரு விதத்தில் கண்ணன் ஐஸ்வர்யா குட்டிச்சுவரா போனதற்கு கதிர் மற்றும் தனம் இவர்கள் தான் காரணம் என்றே சொல்லலாம். தவறு செய்கிறார்கள் என்று தெரிந்ததும் அதை உடனே கண்டித்து விடாமல் இவருக்கு சப்போர்ட் செய்யும் விதமாக இவர்கள் துணை போனது தான் இத்தனை பிரச்சனைக்கும் காரணம். அதனால் தான் கடைசிவரை திருந்தாமலே போயிட்டாங்க.

அத்துடன் கதிர் கூப்பிட்டதும் போனதற்கு காரணம் கண்ணன் ஐஸ்வர்யாவுக்கு எப்படி வாழனும் என்று தெரியாமல் அண்ணன்களை அண்டி பிழைப்பதற்காக போய்விட்டார்கள். கடைசியில் இனிமேலாவது திருந்தி செய்த தவறை உணர்ந்து குடும்பம் என்றால் என்ன என்று புரிந்து வாழ்ந்தால் கண்ணன் ஐஸ்வர்யா வாழ்க்கை நன்றாக இருக்கும்.

Also read: யார் அந்த ஜீவானந்தம் கண்டுபிடித்த ஜனனி.. சுக்கு நூறான குணசேகரனின் சொத்து கனவு

பிறகு மூர்த்தி வீட்டிற்கு வந்ததும் கண்ணன், ஐஸ்வர்யாவை அழைத்து தனியாக ரூமுக்கு போய்விடுகிறார். ஏனென்றால் மூர்த்திக்கு தெரிந்தால் பிரச்சனையாகும் என்பதால். ஆனால் கண்டிப்பாக மூர்த்தியும் எதுவும் சொல்லாமல் இவர்களை ஏற்றுக்கொள்ள தான் செய்வார். ஏனென்றால் அப்பொழுது தான் இந்த நாடகத்திற்கு எண்டு கார்டு ஆகும்.

அடுத்தப்படியாக மீதி இருப்பது ஜீவா மீனா மட்டும் தான். அவர்களும் கூடிய விரைவில் அண்ணனுடன் சேரப் போகிறார்கள். அதன் பின் கூட்டு குடும்பமாக இவர்கள் சந்தோஷமாக இருப்பதை காட்டி சுபம் என்று இந்த நாடகத்துக்கு முடித்து விடப் போகிறார்கள். இன்னும் கூடிய விரைவில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் முடிவடைய இருக்கிறது.

Also read: கோபியை கதற கதற கலாய்த்த ஒட்டுமொத்த குடும்பம்.. அல்டிமேட் நக்கல் நையாண்டி