ஆர்ஆர்ஆர் படத்தால் ஷங்கருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி.. மார்க்கெட்டை தக்க வைக்க போராட்டம்

தெலுங்கு சினிமாவின் சக்கரவர்த்தியான சிரஞ்சீவியின் மகன் தான் ராம் சரண். இவருக்கு தெலுங்கு சினிமாவைத் தாண்டி தமிழ்நாட்டிலும் தற்போது அதிக ரசிகர் பட்டாளம் பெருகி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் அண்மையில் வெளியான ஆர் ஆர் ஆர் படம்தான்.

ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் ஆகியோர் நடிப்பில் ஆர் ஆர் ஆர் படம் வெளியானது. இப்படம் வெளியாகி திரையரங்குகளில் சக்கை போடு போட்டது. வசூலிலும் நல்ல லாபம் கிடைத்தது. பான் இந்திய படமாக வெளியான ஆர் ஆர் ஆர் படத்தால் ராம்சரன் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர்கள்.

இந்நிலையில் தற்போது ராம் சரணை வைத்த இயக்குனர் ஷங்கர் ஒரு பிரமாண்ட படத்தை இயக்கி வருகிறார். ஷங்கர் எப்போதுமே தன்னுடைய படங்களில் பிரம்மாண்டத்திற்கு பஞ்சமே வைக்க மாட்டார். அதையே தான் தற்போது ராம் சரணும் விரும்புகிறார். ஏனென்றால் ஆர் ஆர் ஆர் படத்தால் ராம்சரண் ஒரு அந்தஸ்தை பெற்றுள்ளார்.

அதை தக்க வைத்துக் கொள்ள மீண்டும் அதுபோன்ற படத்தால் மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் உள்ளார். அதனால் இப்படமும் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. மேலும் சமீபத்தில் தமிழ் புத்தாண்டையொட்டி ராம்சரண் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் வாழ்த்து கூறியிருந்தார்.

இது தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனால் தமிழ்நாட்டிலும் அதிக ரசிகர்களை பெற்றுள்ள ராம்சரன் அதனை தக்கவைத்துக்கொள்ள தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு கதை இருக்கவேண்டும் என கூறியுள்ளாராம்.

இந்நிலையில் ராம்சரனின் மார்க்கெட்டை உயர்த்துவது ஷங்கர் கையில்தான் உள்ளது. ஏனென்றால் ஆர் ஆர் ஆர் படம் போல ரசிகர்களை கவரும் விதமாக இந்த படம் இருந்தால் மட்டுமே ராம்சரண் ரசிகர்கள் மனதில் தன்னை தக்க வைத்துக்கொள்ள முடியும் . மேலும் தமிழ்நாட்டில் ராம்சரணின் கேரியர் ஷங்கரின் கைகளிலேயே இருக்கிறது.

Next Story

- Advertisement -