ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

மீண்டும் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் அஜித், விஜய்.. பக்கா பிளான் போட்ட மகிழ்திருமேனி

Ajith Vs Vijay: விஜய் முயல் வேகத்தில் செல்லும்போது அஜித் ஆமை வேகத்தில் நகர்வது எந்த விதத்தில் நியாயம் என தல ரசிகர்கள் விரக்தி அடைந்துள்ளனர். காரணம் துணிவு படம் வெளியான போது தான் விஜய்யின் வாரிசும் வெளியானது. ஆனால் வாரிசு படத்தை முடித்துவிட்டு விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்து விட்டார். படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் ஆகப்போகிறது.

இப்போது லியோ படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தில் நடிப்பதற்கு விஜய் தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் தந்தை, மகன் என இரட்டை கதாபாத்திரத்தில் விஜய் நடிக்கிறார். மேலும் இதில் 3டி விஎப்எக்ஸ் டெக்னாலஜி பயன்படுத்துவதால் அதற்காக அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் வரை விஜய் சென்று வந்துள்ளார். இப்படி ஜெட் வேகத்தில் விஜய் இருக்கிறார்.

Also Read: முரளி நடிக்க இருந்த 3 படத்தை தட்டி தூக்கிய விஜய்.. இந்த வாய்ப்பும் இல்லனா அட்ரஸ் தெரியாம போயிருப்பாரு!

ஆனால் அவருடைய போட்டி நடிகரான அஜித் மட்டும் விடாமுயற்சி படத்தின் அறிவிப்பை மட்டும் வெளியிட்டு படப்பிடிப்பை துவங்காமல் காலதாமதம் ஆகிறது. ஒரு வழியாக இப்போதுதான் மோட்டார் சைக்கிளில் உலக சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு ஓமனிலிருந்து சென்னை திரும்பியுள்ளார். அஜித்தை வைத்து இந்த முறை மகிழ்திருமேனி பக்கா பிளான் போட்டு இருக்கிறார்.

அதாவது தல, தளபதி ரசிகர்களை குத்தாட்டம் போட வைக்கும் அளவுக்கு ஒரு சுவாரசியமான தகவல் வெளிவந்துள்ளது. தளபதி 68 மற்றும் விடாமுயற்சி இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளிவர போகிறது. வரும் அக்டோபர் 2ம் தேதி விடாமுயற்சியின் படப்பிடிப்பை அபுதாபியில் துவங்க உள்ளனர்.

Also Read: விஜய்க்கு எடுத்த 7 படமும் சூப்பர் ஹிட் கொடுத்த ராசியான தயாரிப்பாளர்.. நன்றி மறக்காத தளபதி

இதில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். திரிஷா ஏற்கனவே மங்காத்தா, என்னை அறிந்தால் போன்ற பிளாக்பஸ்டர் படத்திற்கு பிறகு மறுபடியும் விடாமுயற்சியில் அஜித்துடன் ஜோடி சேர்கிறார். அதேபோல விஜய்யின் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பும் அக்டோபர் முதல் வாரத்தில் துவங்கப்படுகிறது.

இந்த இரண்டு படங்களின் மீதான எதிர்பார்ப்பை எகிற விடும் வகையில் வெங்கட் பிரபு மற்றும் மகிழ்திருமேனி இருவரும் ஒரே சமயத்தில் படப்பிடிப்பை துவங்கி, படத்தை ஒரே நாளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். வாரிசு, துணிவு படத்திற்கு பின் மறுபடியும் தல தளபதி இருவரும் தளபதி 68, விடாமுயற்சி படத்தின் மூலம் மோதிக் கொள்வது கோலிவுட்டில் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.

Also Read: விஜய்க்கு நாளுக்கு நாள் அதிகரிக்கும் பயம்.. லியோ பட ஆடியோ லான்ச்-க்கு தளபதி போட்ட கட்டுப்பாடு

- Advertisement -

Trending News