திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

மகனை அவமானப்படுத்திய ஈஸ்வரி, பாக்யாவை பழிவாங்க போகும் கோபி.. எவ்வளவு பட்டாலும் திருந்தாத சைக்கோ

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், தான் செய்தது தவறு என்று உணராத வரை கோபி தொடர்ந்து பாக்யாவிற்கு தொந்தரவு கொடுத்தே தான் வருவார். அந்த வகையை தற்போது பாக்யா ஏற்பாடு பண்ணிய ஈஸ்வரி மற்றும் தாத்தாவின் பங்க்ஷனுக்கு போன கோபிக்கு மிகப்பெரிய அவமானமும் அசிங்கமும் ஏற்பட்டுவிட்டது.

கோவிலுக்கு ஏதோ ஒரு ஆளு வந்துட்டு போற மாதிரி நினைச்சுக்கிடலாம் என்று பழனிச்சாமி சொல்லி கோபியை அங்கே ஒரு ஓரமாக நிற்பதற்கு ஈஸ்வரி மற்றும் தாத்தா சம்மதம் கொடுத்து விட்டார்கள். இந்த நிலையில் ஒவ்வொரு தம்பதிகளாக வந்து தாத்தாவிடம் ஆசிர்வாதம் வாங்கிட்டு போகிறார்கள். அப்பொழுது பாக்கியாவும் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கும் பொழுது உன்னை பிடித்த கெட்ட விஷயங்கள் எல்லாம் உன்னை விட்டு போய்விட்டது.

தீராத அவமானத்தால் வில்லனாக மாறி பாக்யாவை பழிவாங்க நினைக்கும் கோபி

இனி நீ நினைக்கிற வாழ்க்கை உனக்கு சந்தோசமாக அமையும். கூடவே நாங்கள் அனைவரும் சப்போர்ட் பண்ணுவதற்கு இருப்போம் என்று வாழ்த்தி அனுப்பி விட்டார். அடுத்து பழனிச்சாமியை ஆசிர்வாதம் வாங்கிய நிலையில், எல்லோரும் போய் வாங்குறாங்க நானும் என் அப்பா அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்க தான் செய்வேன் என்று கோபி மேடைக்கு சென்று பெற்றோர்கள் காலில் விழுகிறார்.

ஆனால் தாத்தா ரொம்பவே கோபப்பட்டு கோபியை அசிங்கமாக திட்டிவிட்டு கொடுத்தை கிப்டையும் தூக்கி எறிந்து விடுகிறார். இதனால் அனைவரது முன்னாடியும் அவமானப்பட்ட கோபி கீழே இறங்கி ஓரமாக நிற்கிறார். பிறகு அனைவரும் சந்தோஷமாக குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை எடுத்துக் கொள்கிறார்கள். இந்த புகைப்படத்தை கோபியும் அவருடைய ஃபோனில் எடுக்கிறார்.

ஆனால் அப்பொழுது அவருடைய அப்பாவை மட்டும் பார்த்து ரொம்பவே சைக்கோ தனமாக கோபப்பட்டு ஒரு வில்லனாக மாறிய தருணத்தை பார்க்க முடிகிறது. இதனை தொடர்ந்து பாக்யா, இருக்கும் வரை தானே நீங்கள் இப்படி பண்ணுகிறீர்கள். அதனால் பாக்யாவை உங்களிடம் இருந்து பிரித்து காட்டுவேன் என்று சபதம் போட்டு பாக்கியாவிற்கு தொந்தரவு செய்து மிகப் பெரிய வில்லங்கத்தனத்தை பண்ண போகிறார்.

அந்த வகையில் நிச்சயம் பாதிக்கப்பட போவது ஈஸ்வரி மற்றும் தாத்தாவாகத்தான் இருப்பார்கள். இந்த கோபி எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்டார் என்பதற்கு ஏற்ப தொடர்ந்து தப்புக்கு மேல் தப்பு செய்து அனைவரையும் நோகடித்து வருகிறார். இதனை தொடர்ந்து ஜெனி மற்றும் செழியனை அந்த குடும்பத்தில் இருந்து எப்படியாவது பிரித்து தனியாக அனுப்பி வைக்கப் போகிறார்.

கடைசியில் பாக்கியா மட்டும் தனியாக நிற்கும் பொழுது, ரெஸ்டாரண்டையும் அவரிடம் இருந்து புடுங்கி விட்டு துன்பப்படுத்தப் போகிறார். ஏனென்றால் இதெல்லாம் பண்ணினால் தான் கோபியின் அருமை அவருடைய அப்பா அம்மாவுக்கு புரியும் என்பதற்காக சைக்கோ மாதிரி பல தில்லாலங்கடி வேலைகளை பண்ணப் போகிறார். ஆனால் இதில் எப்படி பாக்கியா தப்பிக்க போகிறார் என்பதுதான் அடுத்து ஒவ்வொரு கதையாக இருக்கப் போகிறது.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்

- Advertisement -

Trending News